பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவுக்கு நாளை 09.03.2019, பயணம் மேற்கொள்கிறார். இங்குள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்பொருள் கல்விக்கழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைப்பார்.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்பொருள் கல்விக்கழகம் தொடங்கப்படுவதைக் குறிக்கும் வகையில் கல்வெட்டை அவர் திறந்து வைப்பார். இந்த வளாகத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா உருவச்சிலையை அவர் திறந்து வைப்பார்.

மெட்ரோ திட்டத்தில் நொய்டா சிட்டி செண்ட்ர் – நொய்டா மின்னணு நகர் பிரிவைப் பிரதமர் தொடங்கிவைப்பார். இந்தப் பிரிவு நொய்டாவில் வாழ்வோருக்கு வசதியான விரைவான போக்குவரத்தை அளிக்கும். மேலும், சாலைகளில் நெரிசலைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தாக அமையும். தில்லி மெட்ரோவின் விரிவாக்கமாக 6.6 கி.மீ. தூரத்திற்கான இந்தப் பிரிவு இருக்கும்.

இரண்டு அனல் மின் நிலையங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷஹார் மாவட்டத்தின் குர்ஜாவில் 1,320 மெகாவாட் சூப்பர் அனல் மின் திட்டம் இவற்றில் ஒன்றாகும்.

பீகார் மாநிலம் பக்சாரில் 1320 மெகாவாட் அனல் மின் நிலையம் இரண்டாவது திட்டமாகும். இதற்கு காணொலிக் காட்சி மூலம் அவர் அடிக்கல் நாட்டுவார்.
பின்னர் அங்கு திரண்டிருப்போரிடையே பிரதமர் உரையாற்றுவார்.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Infra sectors drove corporate investment uptick in FY25: Bank of Baroda

Media Coverage

Infra sectors drove corporate investment uptick in FY25: Bank of Baroda
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமரைச் சந்தித்தார் ஹரியானா முதலமைச்சர்
May 21, 2025

ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

‘’ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி  பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.