பிரதமர் திரு. நரேந்திர மோடி கரும்பு விவசாயிகள் 150 பேர் கொண்ட குழுவினரை லோக் கல்யாண் மார்கில் உள்ள அலுவலகத்தில் வரும் ஜூன் 29ம் தேதி சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்தக் குழுவில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் இடம்பெறுகிறார்கள்.
இந்த சந்திப்பின்போது, கரும்பு விவசாயம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள், இடையீடுகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


