ஆச்சாரியா ஜே.பி. கிரிபலானி மற்றும் மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

“ஆச்சாரியா ஜே.பி. கிரிபலானி மற்றும் மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோரின் பிறந்தநாளில் அவர்களை நினைவுகூறுவோம். சுதந்திரப் போராட்டத்தின் போது அளப்பரிய பங்காற்றிய இரண்டு தலைசிறந்த தலைவர்களும், பொது நலன், சமத்துவம், கல்வி மற்றும் நீதியை நிலைநாட்ட அதிக கவனம் செலுத்தியதையும் ஒருபோதும் மறக்க முடியாது”, என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.