மொரீசியஸ் பிரதமர் மேதகு பிரவிந்த் குமார் ஜகுநாத்தின் தந்தை சர் அனிரூத் ஜகுநாத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, மொரீசியஸ் பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.
மொரீசியஸ் பிரதமராகவும், அதிபராகவும், பொது வாழ்வில் சர் அனிரூத் நீண்ட காலம் பணியாற்றியதை பிரதமர் நினைவுக் கூர்ந்தார்.
இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினருடனும், சர் அனிரூத் ஜகுநாத்துக்கு மிகுந்த மரியாதை இருப்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், மொரிசியஸ் உடனான இந்தியாவின் நட்பு வளர்ச்சியடைவதில் அவர் தொலைநோக்குடன் பங்காற்றியதையும் பிரதமர் பாராட்டினார்.
அவரை பெருமையான வெளிநாட்டு வாழ் இந்தியர் என அழைத்த பிரதமர், சர் அனிரூத்துக்கு, பிரவாசி பாரதிய சம்மான் மற்றும் பத்ம விபூஷன் விருது அளித்து கவுரவிக்கும் பாக்கியம் இந்தியாவுக்கு கிடைத்தது என கூறினார்.
சர் அனிரூத்தின் மரபை பின்பற்றும் வகையில், இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்கள் உறுதி பூண்டனர்.


