2026 பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அபுதாபியின் பட்டத்து இளவரசர் மேன்மைதங்கிய ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 2026 பிப்ரவரி 19 அன்று புதுதில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் பங்கேற்றார். ஏற்கனவே, செப்டம்பர் 2024-ல் இந்தியாவில் பயணம் மேற்கொண்டதையடுத்து, இந்தப் பயணம் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும்.

 

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு இடையே அபுதாபியின் பட்டத்து இளவரசரை பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 19 அன்று சந்தித்தார். வலுவான அரசியல், கலாச்சாரம், வணிகம், எரிசக்தி, மக்களுடனான தொடர்புகள் ஆகியவற்றை மையப்படுத்திய இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விரிவான உத்திசார் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை இருதலைவர்களும் வலியுறுத்தினர். அண்மையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் மேன்மைதங்கிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அபுதாபி, துபாய் ஆகியவற்றின் மன்னர் குடும்ப உறுப்பினர்களின் வெற்றிகரமான பயணத்தை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

 

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டை வெற்றிகரமாக்கியுள்ள பிரதமருக்கு திரு ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பாராட்டினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸை தொடர்ந்து அடுத்த ஏஐ உச்சிமாநாட்டை நடத்தும் சுவிட்சர்லாந்தின் முன்முயற்சியைப் பிரதமர் வரவேற்றார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India-UK FTA comes into effect today, unlocking duty-free access for Indian exports

Media Coverage

India-UK FTA comes into effect today, unlocking duty-free access for Indian exports
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 14, 2026
July 14, 2026

From Local Fields to Global Recognition: PM Modi’s ‘Vocal for Local’ is Now Delivering Real Global Respect