NRIs are not only the Brand Ambassadors of India but also represent its strength, capabilities and characteristics: PM
With its rapid progress, India is being seen on a high pedestal across the world and is in a position to lead the global community: PM Modi
India is on course to become a global economic powerhouse, says PM Modi

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (22.01.19) வாரணாசியில் உள்ள தீன்தயாள் ஹஸ்த்காலா சங்குலில் 15வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின விழாவினைத் துவக்கி வைத்தார்.

2019-ன் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின விழாவில் தலைமை விருந்தினர் மொரிஷீயஸ் பிரதமர் திரு.பிரவிந்த் ஜகன்னாத், உத்தரபிரதேச ஆளுநர் திரு.ராம் நாய்க், வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹரியானா முதல்வர் திரு.மனோகர் லால் கட்டார், உத்தரகாண்ட் முதல்வர் திரு.திரிவேந்த்ர சிங் ராவத், வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை துணை அமைச்சர் ஓய்வு பெற்ற ஜெனரல்.வி.கே.சிங் மற்றும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது உரையில், நமது முன்னோர் நிலத்தின் மீது கொண்டுள்ள அன்பும் நேசமுமே புலம்பெயர்ந்தவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளது என்றார். புதிய இந்தியாவை உருவாக்க வெளிநாடுவாழ் இந்திய சமூகம் கைகோர்க்க அவர் அழைப்பு விடுத்தார்.

வசுதைவ குடும்பகம் என்ற பராம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கினைப் பிரதமர் பாராட்டினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவின் விளம்பர தூதர்களாக மட்டுமல்லாமல், அவர்கள் அதன் வலிமை, திறன் மற்றும் பண்புகளைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பதாகவும் அவர் கூறினார். புதிய இந்தியாவைக் கட்டமைத்திட, குறிப்பாக ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதன் துரித வளர்ச்சியினால், உலகம் முழுவதும் இந்தியாவை உயர்ந்த இடத்தில் பார்ப்பதுடன், உலகளாவிய சமூகத்திற்குத் தலைமை தாங்கும் இடத்தில் உள்ளதாகவும் பிரதமர் கூறினார். சர்வதேச சூரியஒளி கூட்டமைப்பு ஓர் உதாரணமாகும். மேலும், உள்ளூர் தீர்வு – உலகளாவிய செயலாக்கம் என்பதே எங்கள் மந்திரமாகும் என மோடி கூறினார். சர்வதேச சூரிய கூட்டமைப்பு என்பது, ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே தொகுப்பு என்ற திசையில் எடுத்துவைக்கும் அடியாகும் என அவர் வருணித்தார்.

இந்தியா உலகளாவிய பொருளாதார சக்தியின் இருப்பிடமாக உருவாகி வருகிறது என பிரதமர் தெரிவித்தார். அது மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றினையும், உலகின் மிகப் பெரிய உடல்நலத் திட்டத்தையும் அது கணக்கில் கொண்டுள்ளது.  இந்தியாவில் உருவாக்குவோம் திட்டத்தில் நாங்கள் சிறந்த முன்னேற்றங்களை கண்டுள்ளோம். அதிகளவிலான மகசூல் உற்பத்தி எங்களது மிகப் பெரிய சாதனையாகும்.

முந்தைய அரசின் உறுதியின்மை மற்றும் முறையான கொள்கையின்மைனால், பயனாளிகளுக்காகப் பெருமளவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை அவர்கள் பெற இயலவில்லை என பிரதமர் வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் இன்று, தொழில்நுட்ப உதவியுடன் அமைப்பில் இருந்த ஓட்டைகளை நாங்கள் அடைத்துள்ளோம். மக்களின் பணம் கொள்ளை போவதைத் தடுத்து, இழந்த 85 சதவீத பணத்தைப் பெற்று, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில், மக்களின் கணக்குகளில் நேரடியாக ரூ.5,80,000 கோடி மாற்றப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார். இங்கிலாந்து, பிரான்சு மற்றும் இத்தாலி நாடுகளின் மக்கள் தொகைக்கு இணையாக பயனாளிகள் பட்டியலில் இருந்த 7 கோடி போலி பெயர்கள் எவ்வாறு நீக்கப்பட்டது என்பதை பிரதமர் விவரித்தார்.  

புதிய இந்தியாவின் புதிய நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், அரசு மேற்கொண்டு வரும் மாற்றங்களில் இவை சில என பிரதமர் கூறினார்.

புதிய இந்தியாவிற்கான தீர்விற்குப் புலம்பெயர்ந்தவர்களும் நிகரான முக்கியத்துவம் பெற்றுள்ளனர் என பிரதமர் கூறினார். மேலும், அவர்களின் பாதுகாப்பையும் தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக கூறிய அவர், பிரச்சினை நிறைந்த பகுதிகளிலிருந்து 2 லட்சம் இந்தியர்களை மீட்கும் சவாலை அரசு எவ்வாறு மேற்கொண்டது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன் குறித்து பேசிய திரு.மோடி கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகள் எளிமையாக்கப்பட்டு, இ விசா அவர்களது பயணத்தை எளிதாக்கியுள்ளது என்றார். அனைத்து வெளிநாடுவாழ் இந்தியர்களும் தற்போது பாஸ்போர்ட் சேவாவுடன் இணைக்கப்பட்டு, இ கடவுச்சீட்டு வழங்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிநாடுவாழ்வோருக்கு தீர்த்த தரிசன திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் 5 இந்தியரல்லாத குடும்பங்களை இந்தியாவிற்கு செல்ல அழைப்பு விடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் அவர்கள் காந்தியடிகள், குருநானக் தேவ் ஆகியோரின் மாண்புகளை பரப்பி, அவர்களது நூற்றாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க கேட்டுக் கொண்டார். காந்தியடிகளுக்கு பிரியமான பஜனை பாடலான, வைஷ்ணவ ஜன, என்ற பாடலை தொகுப்பதில் உலக சமுதாயம் எங்களுடன் இணைந்ததற்கு நாங்கள் பெருமையடைகிறோம் என்றார் அவர்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தினை தங்களது அன்பு மற்றும் விருந்தோம்பலால் வெற்றியடைய செய்ய பங்காற்றியததற்காக காசி நகர மக்களைப் பிரதமர் பாராட்டினார். பள்ளி வாரியத் தேர்வுகள் எதிர்வர உள்ள நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களுடன் நமோ செயலி மூலம் பரிக்ஷா பே சர்ச்சாவில் 2019, ஜனவரி, 29 அன்று காலை 11.00 மணிக்குக் கலந்துரையாட உள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினம்-2019-ன் சிறப்பு விருந்தினரான மொரிஷீயஸ் பிரதமர் திரு.பிரவிந்த் ஜகன்னாத் அவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்களின் நினைவுகள் மற்றும் அவர்களது முன்னோர்களின் நிலத்துடனான தொடர்புகளை நினைவு கூர்ந்தார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், பகிரப்பட்ட வரலாறு மற்றும் கலாச்சாரத்தினால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர் என்ற அடையாளத்தை இத்தகைய மாபெரும் கூட்டங்கள் வலுப்படுத்துகிறது என்றார். இந்தியா உயரியது என்றால், இந்தியத்தன்மை அனைவருக்குமானது என்றார் அவர். கற்றறிந்த மற்றும் சுயசார்பான வெளிநாடுவாட்டில் வாழ்பவர்கள் தேசத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்ற முடியும் என்றும், வெளிநாட்டில் வாழ்பவர்களின் இணைப்பு பன்முகத்தன்மைக்கு  உதவும் என்றும் மொரிஷீயஸ் பிரதமர் கூறினார்.

தனது போஜ்பூரி பேச்சினால் கூட்டத்தை உற்சாகமடையச் செய்த அவர், முதல் சர்வதேச போஜ்பூரி திருவிழாவினை மொரிஷீயஸ் நடத்தும் என்றார்.

வெளியுறவு அமைச்சர் தனது வரவேற்புரையில், பிரதமர் திரு.மோடி அவர்களின் சிறந்த தலைமையினால் இந்தியா இன்று பெருமையடைந்துள்ளதாகக் கூறினார். தங்களது தாய்நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளதற்காக வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

பாரத் கோ ஜாயே கேள்வி-பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் பிரதமர் திரு.மோடி அவர்கள் கவுரவித்தார். இந்தியா குறித்தான இந்தக் கேள்வி-பதில் போட்டி, வெளிநாடுவாழ் இந்திய இளைய சமுதாயத்தினருக்காக நடத்தப்பட்டது.

2019, ஜனவரி, 23 அன்று நடைபெறும் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு, அவர்களின் பங்களிப்புகளுக்காக, விருது வழங்கி கவுரவிப்பார்.

மாநாட்டிற்குப் பின், ஜனவரி 24 அன்று, புலம்பெயர்ந்தவர்களின் பிரதிநிதிகள் கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பிரயாக்ராஜ் செல்வார்கள். அதற்குப்பின் ஜனவரி 25 அன்று தில்லிக்குச் சென்று, புதுதில்லி, ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடுவார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Bumper Apple crop! India’s iPhone exports pass Rs 1 lk cr

Media Coverage

Bumper Apple crop! India’s iPhone exports pass Rs 1 lk cr
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Odisha joins Ayushman Bharat: PM hails MoU signing
January 13, 2025

The Prime Minister, Shri Narendra Modi has congratulated the people of Odisha for the MoU signing between the National Health Authority, Government of India, and the Department of Health and Family Welfare, Government of Odisha, for the Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. Shri Modi remarked that this scheme will ensure the highest-quality healthcare at affordable rates, particularly the Nari Shakti and the elderly of Odisha.

Replying to a post on X by Chief Minister of Odisha, Shri Mohan Charan Majhi, the Prime Minister posted :

"Congratulations to the people of Odisha!

It was indeed a travesty that my sisters and brothers of Odisha were denied the benefits of Ayushman Bharat by the previous Government. This scheme will ensure the highest-quality healthcare at affordable rates. It will particularly benefit the Nari Shakti and the elderly of Odisha."