PM Modi inaugurates the Arunachal Civil Secretariat in Itanagar, Arunachal Pradesh
I can tell you with great pride that ministers & officials from the Centre are visiting the Northeast very regularly: PM Modi
I am delighted to visit Arunachal Pradesh and be among the wonderful people of this state: PM Modi in Itanagar
For farmers, we are ensuring they get better access to markets, says PM Modi
#AyushmanBharat scheme will take the lead in providing quality and affordable healthcare: PM in Itanagar
PM Modi says that development will originate in Arunachal Pradesh in the coming days & this development will illuminate India

அருணாசலப் பிரதேசம் இடா நகரில் முன்னாள் முதலமைச்சர் தோர்ஜி கண்டு பெயரில் அமைந்த அரசு மாநாட்டு மையத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (2018, பிப்ரவரி 15) திறந்துவைத்தார். இந்த மையத்தின் வளாகத்தில் ஓர் அரங்கம், கருத்தரங்க மையங்கள், கண்காட்சி அரங்கம் ஆகியவை அமைந்துள்ளன.

நிகழ்ச்சியை அடுத்து, மாநில தலைமைச் செயலகக் கட்டடத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவற்றுடன், டோமோ ரிபா மக்கள் நலம் மற்றும் மருத்துவ அறிவியல் மையத்தில் கல்விப் பிரிவுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர், அருணாசலப் பிரதேச மாநிலத்திற்கு வருவதும் மிகச் சிறந்த மக்களிடையே பேசுவதும் பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

இந்தத் தலைமைச் செயலகத்தில் மாநிலத்தின் மிக முக்கியமான துறைகள் இடம்பெற்றுள்ளன. மிகத் தொலைவில் உள்ள கிராமங்களிலிருந்து வரும் பொதுமக்களுக்கு முக்கிய துறைகள் இயங்கும் இடம் மிக எளிதில் அணுக இயலும் வகையில் இருக்கும். மேலும், இது தொடர்பான ஒருங்கிணைப்பும் வசதியும் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

இடா நகரில் மாநாட்டு மையத்தைத் திறப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய பிரதமர் திரு. மோடி, “இது வெறும் கட்டடத்துக்கும் மேலானது. அதுமட்டுமல்ல, அருணாசலப்  பிரதேச மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தது” என்றார். இங்கு நடைபெறும் மாநாடுகள், கலாசார நிகழ்வுகள் அரசு அலுவலர்களையும் தனியார் நிறுவனங்களையும் ஈர்க்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், “நான் தனிப்பட்ட முறையில் மக்களிடம் இந்த மாநாட்டு மையத்துக்குச் செல்லுமாறும் முக்கிய கூட்டங்களை நடத்தும்படியும் கேட்டுக் கொள்வேன்” என்றார்.

வடகிழக்கு மாநில கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஷில்லாங் நகருக்குத் தான் வந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், சிக்கிமில் வேளாண்மைத் துறை தொடர்பாக மிக முக்கியமான மாநாடு நடைபெற்றது என்று கூறினார்.

“மத்திய அமைச்சர்களும், மத்திய அமைச்சகத்தின் அதிகாரிகளும் வடகிழக்கு மாநிலப் பகுதிகளுக்கு அடிக்கடி அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்கள்” என்று பிரதமர் தெரிவித்தார்.

மக்கள் நலம் குறித்துப் பேசிய அவர், இத்துறையைப் பொறுத்தவரையில், மனித ஆற்றல் மேம்பாடு, கட்டுமானம், நவீனத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றின் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. “காரணம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மருத்துவம் பயில்வோர் அங்குள்ள உள்ளூர் சுகாதாரப் பிரச்சினைகளை நன்கு அறிந்துகொள்ள இயலும்” என்றார்.

மக்களுக்கு சுகாதார நலன் மிகுந்த தரமாகவும் அதே சமயம் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் விதத்திலும் அமைய வேண்டும். ஸ்டென்ட் எனப்படும் ரத்தநாளத்தில் செலுத்தப்படும் நுண்ணிய கருவிகளின் விலை ஏழைகளும், நடுத்தர மக்களும் பயன்படும் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளன. “ஆயுஷ்மான் பாரத் திட்டம் தரமான, குறைந்த செலவினால் ஆன சுகாதார நலனை வழங்குவதற்குப் பெரிதும் துணை புரியும்” என்றார்.

மாநிலத்தில் சிறப்பாகப் பணியாற்றுவதாக அருணாசலப் பிரதேச முதலமைச்சர் திரு. பெமா கண்டுவைப் பெரிதும் பாராட்டிய பிரதமர், “அருணாசலப் பிரதேச மாநிலம் 2027ம் ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகத் தரமான திட்டத்தை மாநில முதலமைச்சர் தயாரித்துள்ளார். இத்திட்டத்திற்கான யோசனைகளை அரசு அதிகாரிகளிடமிருந்து மட்டும் அவர் திரட்டவில்லை. பொதுமக்களில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் திரட்டி திட்டத்தை வகுத்துள்ளார்” என்று புகழ்ந்தார்.

Click here to read PM's speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India-US trade deal: US cuts tariffs to 18%, India gains edge over regional peers

Media Coverage

India-US trade deal: US cuts tariffs to 18%, India gains edge over regional peers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam emphasising the Power of Self-Confidence in Building a Developed India
February 03, 2026

Prime Minister Shri Narendra Modi today shared a Sanskrit Subhashitam emphasizing the transformative role of self-confidence in realizing the vision of a developed India.

In a post on X, he wrote:

"आत्मविश्वास वह शक्ति है, जिसके बल पर सब कुछ संभव है। विकसित भारत के सपने को साकार करने में देशवासियों की यही शक्ति बहुत काम आने वाली है।

श्रीर्मङ्गलात् प्रभवति प्रागल्भ्यात् सम्प्रवर्धते।

दाक्ष्यात् तु कुरुते मूलं संयमात् प्रतितिष्ठति॥ "