This is the strength of the farmers of our country that the production of pulses has increased from almost 17 million tonnes to 23 million tonnes in just one year: PM
100% neem coating of urea has led to its effective utilisation: PM
Due to Soil health Cards lesser fertilizers are being used and farm productivity has gone up by 5 to 6 per cent: PM Modi
We have announced ‘Operation Greens’ in this year’s budget, we are according TOP priority to Tomato, Onion, Potato: PM Modi
Promoting use of solar energy will lead to increase in the income of farmers: PM Modi

 

  • தில்லி, பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற “வேளாண்மை – 2022: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” பற்றிய தேசிய மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    இந்த மாநாட்டில் கீழ்க்காணும் ஏழு அம்சங்கள் பற்றி ஆய்வுக் குழுவினர் ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்:

    • கொள்கை மற்றும் ஆளுகைச் சீர்திருத்தங்கள்

    • வேளாண் வர்த்தகக் கொள்கை மற்றும் ஏற்றுமதி மேம்பாடு;சந்தை அமைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் திறன்

    • மதிப்புச் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை

    • அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மையில் தொடங்கிடுத் திட்டங்கள்

    • நீடித்த மற்றும் சமச்சீரான வளர்ச்சி மற்றும் திறமையான சேவையை வெளிப்படுத்துதல்

    • மூலதன முதலீடு மற்றும் விவசாயிகளுக்கு நிறுவனம் சார்ந்த கடன் வழங்குதல்

    • கால்நடைகள், பால்வளம், கோழி வளர்ப்பு மற்றும் மீன்வள அபிவிருத்தியை வளர்ச்சிக்கான கருவியாக்குதல்

இந்த ஆய்வறிக்கைகளைப் பிரதமர் பாராட்டினார். பருப்பு உற்பத்தி அதிகரிப்புக்குக் காரணமான இந்திய விவசாயிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க அரசு பல்வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நான்கு அம்சங்களைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்: இடுபொருட்கள் செலவைக் குறைத்தல்; விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்தல்; கழிவுகளைக் குறைத்தல்; மற்றும் வருமானத்திற்கான மாற்று வழிமுறைகளை உருவாக்குதல்.

யூரியா உரத்தில் 100 சதவீதம் வேம்பு கலப்பதன் மூலம் யூரியா உரத்தின் தன்மையையும் மேம்படுத்தும் என்று தெரிவித்த பிரதமர், உற்பத்தியும் அதிகரிக்கும் என்றார். மண் நல அட்டைகளைப் பயன்படுத்துவதன் மூலம், ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதுடன் உற்பத்தியும் அதிகரிக்கிறது என ஆய்வறிக்கை ஒன்று தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிலுவையில் உள்ள 99 பாசனத் திட்டப் பணிகளை முடிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். இவற்றில் 50 திட்டங்கள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு பாசனத் திட்டமும் நிறைவேற்றி முடிக்கப்படும்போது விவசாயிகளின் இடுபொருள் செலவு வெகுவாக குறையும். பிரதமரின் க்ரிஷி சின்சாய் திட்டத்தின் மூலம், இதுவரை 20 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் நுண்பாசனத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இருப்பதாகக் கூறினார்.

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள “பசுமை நடவடிக்கை” திட்டம், தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பெரும் பயனை அளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். 22 ஆயிரம் கிராமிய வேளாண் மையங்களின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு மின்னணுச் சந்தையுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் கூறினார். விவசாயிகள் தங்களது நிலத்திலிருந்து 5 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவிற்குள் சந்தையை அணுகுவதற்கேற்ப இத்தகைய வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

விவசாயக் கடன்தொகை உயர்த்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், விவசாயிகளுக்கு எளிதில் கடன் கிடைப்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும் என்றார்.

விவசாயக் கழிவுகளை சொத்துகளாக மாற்ற பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India leads with world's largest food-based safety net programs: MoS Agri

Media Coverage

India leads with world's largest food-based safety net programs: MoS Agri
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 15, 2024
September 15, 2024

PM Modi's Transformative Leadership Strengthening Bharat's Democracy and Economy