PM congratulates Harivansh Narayan Singh on being elected as Deputy Chairperson of Rajya Sabha
Working closely with Chandra Shekhar Ji, Harivansh Ji knew in advance that Chandra Shekhar Ji would resign. However, he did not let his own paper have access to this news. This shows his commitment to ethics and public service: PM
Harivansh Ji is well read and has written a lot. He has served society for years: PM Modi

மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஹரிவன்ஷிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

துணைத்தலைவர் தேர்தலுக்குப் பின்னர், மாநிலங்களவையில் பேசிய பிரதமர், அவை முன்னவர் திரு.அருண் ஜேட்லி உடல் நலம் தேறி மீண்டும் அவைக்கு வந்திருந்ததுப் பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். 1857ல் தொடங்கிய விடுதலைப்போருடன் தொடர்புடைய பல்லியாவைச் சேர்ந்தவர் திரு. ஹரிவன்ஷ் என்று அவர் கூறினார். லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணால் ஈர்க்கப்பட்டவர் திரு. ஹரிவன்ஷ் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகரருடன் ஹரிவன்ஷ் பணியாற்றியதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

சந்திரசேகரருடன் நெருக்கமாக பணியாற்றிய ஹரிவன்ஷிற்கு அவர் ராஜினாமா செய்யப்போகிறார் என்ற தகவல் முன்கூட்டியே தெரியும் என்று பிரதமர் கூறினார். இருப்பினும், தமது சொந்தப் பத்திரிகைக்கே இந்தத் தகவலை அவர் வெளிப்படுத்தவில்லை என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார். இது அவரது மரபுகளை மதிக்கும் பண்பையும், பொது சேவையில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் காட்டுகிறது என்று பிரதமர் கூறினார்.

திரு. ஹரிவன்ஷ் சிறந்த படிப்பாளி என்றும், அவர் ஏராளமாக எழுதியுள்ளார் என்றும் பிரதமர் பாராட்டினார். பல ஆண்டுகளாக சமுதாயத்திற்கு திரு. ஹரிவன்ஷ் பாடுபட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அதில் பங்கேற்ற திரு. பி.கே. ஹரிபிரசாத்துக்கும் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். தேர்தல் சுமூகமாக நடக்க ஒத்துழைத்த அனைத்து உறுப்பினர்களுக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Budget 2026-27 lays blueprint for a future-ready digital ecosystem

Media Coverage

Budget 2026-27 lays blueprint for a future-ready digital ecosystem
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 2 பிப்ரவரி 2026
February 02, 2026

Citizens Celebrate PM Modi's Roadmap to Prosperity: Budget 2026 Drives Investment, Jobs, and Sustainable Growth for Every Indian