Prime Minister reviews rescue and relief operations in areas affected by Cyclone Ockhi
PM announces package of relief measures for cyclone affected States
#CycloneOckhi: PM Modi assures Centre's help, says Union Government stands shoulder to shoulder with them in this hour of crisis
#CycloneOckhi: Centre to dispatch immediate financial assistance worth Rs. 325 crore to cater to the requirements of Kerala, Tamil Nadu and Lakshadweep

புயலால் பாதிக்கப்பட்ட லட்சத்தீவு, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். அப்போது, ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த நாளில் கவரட்டி மற்றும் கன்னியாகுமரி பகுதி மக்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். திருவனந்தபுரம் அருகே புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான புந்துரா-வுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார். புயலால் தங்களுக்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை பிரதமரிடம் பொதுமக்கள் விளக்கினர். அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். மேலும், இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு தோளோடு தோள் கொடுத்து நிற்கும் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கவரட்டி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் தனித்தனியாக ஆய்வுக் கூட்டங்களை பிரதமர் நடத்தினார். இந்தக் கூட்டங்களில் ஆளுநர்கள், கேரளா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்கள், தமிழ்நாடு துணை முதலமைச்சர், மக்களவை துணை சபாநாயகர், லட்சத்தீவு பகுதி நிர்வாகிகள் ஆகியோருடன் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

  • புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரணத் தொகுப்பு நடவடிக்கைகள் மூலம், மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

    • கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் தேவைகளை எதிர்கொள்ள உடனடி நிதியுதவியாக ரூ.325 கோடியை மத்திய அரசு வழங்கும்.

    • பிரதமர் இன்று அறிவித்துள்ள நிதியுதவி, ஓக்கி புயல் தாக்கியதைத் தொடர்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் தமிழகத்துக்கு ரூ.280 கோடியும், கேரளாவுக்கு ரூ.76 கோடியும், வழங்கப்பட்டதற்கும் கூடுதலாக வழங்கப்படும்.

    • ஓக்கி புயலால் முழுமையாக சேதமடைந்த சுமார் 1,400 வீடுகளை மறுகட்டுமானம் செய்வதற்கு இந்திய அரசு உதவி செய்யும். இந்த வீடுகளுக்கு பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், முன்னுரிமை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும் புதிய வீட்டைக் கட்டுவதற்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி பெறுவார்கள்.

    • ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கும் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குமாறு காப்பீட்டு நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

    • புயலால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் பிரதமரின் தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளன.

 

முன்னதாக, மறுஆய்வுக் கூட்டங்களின்போது, இந்தப் பகுதியில் கடந்த 125 ஆண்டுகளில் இதுபோன்று தாக்கிய மூன்றாவது மிகப்பெரிய புயலான ஓக்கியின் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. நவம்பர் 30, 2017-ல் புயல் தாக்கியது. தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் அன்றைய தினமே தொடங்கியது. இதுவரை 20 கப்பல்களை ஈடுபடுத்தி ஒட்டுமொத்தமாக 197 கப்பல் நாட்களுக்கு கடலோர காவல் படை பணியாற்றியுள்ளது. மேலும், 186 மணிநேரங்கள் வானில் பறந்து, தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளை கடலோர காவல் படை மேற்கொண்டுள்ளது. அதோடு, 10 கப்பல்களையும், 7 வகையான விமானங்களையும் இந்திய கடற்படை பயன்படுத்தி, 156 கப்பல் நாட்கள் மற்றும் 399 மணிநேரங்கள் வானில் பறந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த மீட்புப்பணிகளில் உதவுவதற்காக இந்த கப்பல்களில் மீனவர்கள் மற்றும் அரசு நிர்வாகத்தினர் என 183 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இது நாள் வரை, மீட்கப்பட்ட அல்லது உதவியைப் பெற்ற மீனவர்கள் 845 பேர்.

கடற்கரையிலிருந்து 700 கடல்மைல்கள் தொலைவையும் தாண்டி, கண்காணிப்புப் பணி நடைபெற்று வருவதாக பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India car sales to hit 4.7 million in FY26 despite bumps

Media Coverage

India car sales to hit 4.7 million in FY26 despite bumps
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets devotees and participants of Matua Dharma Mela
March 16, 2026

The Prime Minister, Shri Narendra Modi has greeted all the devotees and participants of the Matua Dharma Mela. This special occasion is associated with the Jayanti of Purna Brahma Shree Shree Harichand Thakur Ji. “I offer my humble Pranams to him. His thoughts and teachings continue to give strength and hope to several people. They awakened a powerful movement for dignity, equality and devotion. He inspired generations to walk the path of righteousness, harmony and collective upliftment”, Shri Modi stated.

The Prime Minister remarked that the rich and vibrant traditions of Matua culture reflect a deep spiritual strength and an unbreakable commitment to equality. It significantly enriches the social fabric of our nation. “Over the past decade, our Government has been deeply committed to the welfare, empowerment and dignity of the Matua community”, Shri Modi said.

The Prime Minister posted on X:

“My heartfelt greetings and best wishes to all devotees and participants of the Matua Dharma Mela.

This special occasion is associated with the Jayanti of Purna Brahma Shree Shree Harichand Thakur Ji. I offer my humble Pranams to him. His thoughts and teachings continue to give strength and hope to several people. They awakened a powerful movement for dignity, equality and devotion. He inspired generations to walk the path of righteousness, harmony and collective upliftment.

The rich and vibrant traditions of the Matua culture reflect a deep spiritual strength and an unbreakable commitment to equality. It significantly enriches the social fabric of our nation. Over the past decade, our Government has been deeply committed to the welfare, empowerment and dignity of the Matua community.” 

 

“মতুয়া ধর্মমেলায় আগত সমস্ত ভক্ত এবং অংশগ্রহণকারীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই বিশেষ তিথিটি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির জয়ন্তীর সঙ্গে যুক্ত। আমি তাঁকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। তাঁর আদর্শ এবং শিক্ষা আজও অগণিত মানুষকে শক্তি ও আশার আলো দিয়ে চলেছে এবং সম্মান, সাম্য ও ভক্তির এক শক্তিশালী আন্দোলনের জন্ম ঘটিয়েছে। তিনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরকে ন্যায়ের পথ, সম্প্রীতি এবং সমষ্টিগত উন্নয়নের পথে চলার অনুপ্রেরণা জুগিয়েছেন।

মতুয়া সংস্কৃতির এই সমৃদ্ধ এবং প্রাণবন্ত ঐতিহ্য এক গভীর আধ্যাত্মিক শক্তি এবং সাম্যের প্রতি অটুট অঙ্গীকারকে প্রতিফলিত করে। এটি আমাদের দেশের সামাজিক কাঠামোকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করেছে। গত এক দশকে, আমাদের সরকার মতুয়া সম্প্রদায়ের কল্যাণ, ক্ষমতায়ন এবং মর্যাদার প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থেকে কাজ করে চলেছে।”