சத்தீஸ்கர் ஆளுநர் திரு. பல்ராம்ஜி தாஸ் டான்டன் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் ஆளுநர் திரு. பல்ராம்ஜி தாஸ் டான்டனின் மறைவு தமக்கு வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் மதிக்கத்தக்க தலைவரை நாம் இழந்திருப்பதாகவும், சமூகத்திற்கான அவரது சேவை என்றும் நினைவில் கொள்ளப்படும் என்று கூறினார். துயரமான இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் நலம் நாடுபவர்களின் உணர்ச்சிகளோடு தாம் தம்மை இணைத்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

பஞ்சாபில் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக பல ஆண்டுகள் திரு. பல்ராம்ஜி தாஸ் டான்டன் பணியாற்றியதாக அவர் கூறியுள்ளார். தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறைகளில் மிகவும் ஈடுபாடு கொண்ட அவரது நிர்வாக அனுபவம் மாநிலத்திற்கு சிறப்பை தந்ததாக கூறியுள்ளார். அவசர நிலையை எதிர்ப்பதில் அவர் காட்டிய உறுதிப்பாட்டுக்காக அவர் என்றுமே நினைவில் கொள்ளப்படுவார் என்றார் பிரதமர்.

 
Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India clears a major nuclear milestone as Kalpakkam fast breeder reactor turns 'critical'

Media Coverage

India clears a major nuclear milestone as Kalpakkam fast breeder reactor turns 'critical'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Chhattisgarh meets Prime Minister
April 07, 2026