ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பல்வேறு யோகாசனங்களைச் செய்வதில் அவர் பல யோகா பயிற்சியாளர்களுடன் இணைந்தார். யோகா அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது என்று கூறிய பிரதமர், "யோகா அனைவருக்கும், எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, பின்னணிகளுக்கு அப்பாற்பட்டது, வயது அல்லது திறனுக்கு அப்பாற்பட்டது" என்று குறிப்பிட்டார்.

























