மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள மெகா ஜவுளி பூங்கா, மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலு சேர்ப்பதுடன் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த பூங்கா, மாநிலத்தில் வளர்ச்சிக்கான புதிய பாதையை வகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகானின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்து பிரதமர் கூறியதாவது:
“மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மெகா ஜவுளி பூங்கா, நமது மேக் இன் இந்தியா முன்முயற்சிக்கு வலு சேர்ப்பது மட்டுமல்லாமல், மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் வளர்ச்சிக்கான புதிய பாதையையும் வகுக்கும்.”
मध्य प्रदेश के धार जिले में इस मेगा टेक्सटाइल पार्क से जहां मेक इन इंडिया की हमारी पहल को और मजबूती मिलेगी, वहीं युवाओं के लिए रोजगार के साथ-साथ राज्य में विकास के नए द्वार खुलेंगे। #PragatiKaPMMitra https://t.co/DsFAzHGvsw
— Narendra Modi (@narendramodi) May 21, 2023


