டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, வரிசெலுத்துவோரின் பளுவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள அரசு விரும்புகிறது என்று கூறினார். நடைமுறையை மையமாகக் கொண்ட வரிமுறை இந்தியாவில் அதிக அளவில் இருந்துவந்தது என்றும், அது தற்போது மக்களை மையமாகக் கொண்டதாக மாற்றப்படுகிறது என்றும் கூறினார். 

ஜிஎஸ்டி, விருப்பப்படி அமைக்கப்பட்ட வரி அடுக்குகள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, கம்பெனி வரிக் குறைப்பு போன்ற சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் பேசினார். 14.4 சதவீதமாக இருந்த சராசரி ஜிஎஸ்டியை அரசு குறைத்து 11.8 சதவீதமாக குறைத்துள்ளது என்று அவர் கூறினார். வருமான வரி மதிப்பீடுகள் மற்றும் மேல்முறையீடுகள் ஆகியவை தனிப்பட்ட முறையில் இருப்பதை மாற்றியமைத்து, பாகுபாட்டையும், இன்னல்களையும் அகற்ற அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். 

வரி செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அது கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கும், அனைவரின் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்கும் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி விவரித்த பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தங்கள் வரிகளைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “மூன்று கோடி பேருக்கும் அதிகமானவர்கள் வர்த்தகத்துக்காகவும், சுற்றுலாவுக்காகவும் வெளிநாடு சென்றனர். பலர் கார்களை வாங்கினார்கள். ஆனால், 130 கோடி மக்கள் தொகையில் 1.5 கோடி பேர்தான் வருமான வரி செலுத்தியுள்ளார்கள் என்பதுதான் தற்போதைய நிலைமை” என்று அவர் கூறினார்.  அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் 2,200 தொழில்புரிவோர் மட்டுமே தங்களது ஆண்டு வருவாய் ரூ.1 கோடி என அறிவிப்பு செய்துள்ளது நம்பமுடியாத ஆனால் உண்மையான விஷயம்” என்று கூறினார். 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Cabinet approves ₹8,970-crore Guwahati-Tezpur highway project in Assam

Media Coverage

Cabinet approves ₹8,970-crore Guwahati-Tezpur highway project in Assam
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சுயநலமற்ற சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 07, 2026

எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களின் நலனுக்காகப் பணியாற்றும் உன்னத லட்சியத்தையும், சுயநலமற்ற சேவையின் நற்பண்பையும் வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்