பகிர்ந்து
 
Comments

G-20 அமைப்பு நாடுகள் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் மீதான அசாதாரண உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  காணொளி வாயிலாக கலந்து கொண்டார். இந்த மாநாடு G-20 அமைப்புக்கு தற்போது தலைமை பொறுப்பு வகிக்கும் இத்தாலியின் தலைமையில் அந்நாட்டு பிரதமர் திரு மரியோ டிராகி தலைமையில் நடைபெற்றது.

 மனித நேய சூழ்நிலைகள், பயங்கிரவாதம் தொடர்பான கவலைகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் உள்ளிட்ட விஷயங்கள்  இந்த மாநாட்டில் பரிசீலிக்கப்பட்டன.

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளை ஆராய  இந்த மாநாட்டை கூட்டிய இத்தாலியின் முயற்சியை வரவேற்றார்.

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மக்கள் உறவுகளை சுட்டி காட்டிய அவர், கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானின் இளைஞர்கள் பற்றும் பெண்களின் திறன் மேம்பாட்டிற்காகவும், சமூக பொருளாதார வளர்ச்சிக்காகவும் இந்தியா தனது பங்களிப்பை வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் 500-கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை இந்தியா செயல்படுத்தி இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியாவின் மீது  மிகுந்த நட்புறவு கொண்டிருப்பதாகவும், பசி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் ஆப்கானிஸ்தான் மக்கள் படும் அவதியின் வலியை ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாகவும் தடை இன்றியும் கிடைப்பதை சர்வதேச சமுதாயம் உறுதி செய்ய வேண்டியத்தின் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

ஆப்கானிஸ்தான் மண்ணில் பிராந்திய அளவிலோ அல்லது உலகளாவிய அளவிலோ  தீவிரவாதம் மற்றும் பயங்கர வாதத்திற்கு ஆதரவான செயல்கள் நடைப்பெறாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டியத்தின் அவசியத்தையும் திரு மோடி வலியுறுத்தினார்.

பயங்கரவாத செயல்கள், தீவிரவாத மயமாக்கல், போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தல் ஆகியவற்றிற்கு எதிரான நமது கூட்டு முயற்சிகளை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் சமூக பொருளாதார ஆதாயங்களையும், தீவிரவாதத்தின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பாதுகாக்கும் வகையில், பெண்கள் மற்றும் சிறு பான்மையினரை உள்ளடக்கிய நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் அமைய வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

ஐநா சபையில் ஆப்கானிஸ்தானின் முக்கிய பங்கிற்கு ஆதரவு தெரிவித்த அவர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 2593-இன் படி ஆப்கானிஸ்தானுக்கு G-20 நாடுகள் மீண்டும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

ஆப்கானிஸ்தானில் விரும்பிய மாற்றத்தை கொண்டு வருவதை கடினமில்லாத வகையில், சர்வதேச சமூகத்தை ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டுமென்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Nari Shakti finds new momentum in 9 years of PM Modi governance

Media Coverage

Nari Shakti finds new momentum in 9 years of PM Modi governance
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Social Media Corner 28th May 2023
May 28, 2023
பகிர்ந்து
 
Comments

New India Unites to Celebrate the Inauguration of India’s New Parliament Building and Installation of the Scared Sengol

101st Episode of PM Modi’s ‘Mann Ki Baat’ Fills the Nation with Inspiration and Motivation