உணவைப் பற்றிய சிந்தனை

Published By : Admin | September 16, 2016 | 23:56 IST
பகிர்ந்து
 
Comments

இத்தகையதொரு கேள்வியை எழுப்புவது மிகவும் இயற்கையான ஒன்றுதான். இந்தியப் பிரதமர் எதை சாப்பிட விரும்புவார்? அவர் உணவை மிகவும் விரும்பிச் சாப்பிடுபவரா?

இதைப் பற்றி நரேந்திர மோடியே ஒரு முறை பின்வருமாறு கூறியிருந்தார்:

பொதுவாழ்க்கையில் வேலை செய்பவர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் வாழ்க்கை என்பது தினசரி வாழ்க்கைக்கு மாறுபட்ட ஒன்றாகவே இருக்கும். எனவே, பொதுவாழ்க்கையில் ஈடுபட ஒருவர் விரும்பினால், அவர் எதையும் தாங்கக் கூடிய வயிறைக் கொண்டவராக இருக்க வேண்டும்.

35 ஆண்டுகள் நான் பல்வேறு பொறுப்புகளில் வேலை செய்ததன் பொருள் என்னவெனில், நாடு முழுவதிலும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. போகிற இடங்களில் எல்லாம் உணவைக் கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டியிருந்தது. கிடைத்த உணவைச் சாப்பிட வேண்டியிருந்தது. எனக்காக என்று தனியாக எதையும் செய்து தருமாறு நான் எப்போதுமே கேட்டதில்லை.

எனக்கு கிச்சடி மிகவும் பிடிக்கும். இருந்தாலும் கூட, எது கிடைக்கிறதோ அதை சாப்பிடுவேன்.”

அவர் மேலும் சொன்னார்: “நாட்டிற்கு ஒரு சுமையாக இல்லாதவாறு எனது உடல் நலத்தை வைத்துக் கொள்ளவே விரும்புகிறேன். என் கடைசி மூச்சு உள்ளவரை ஆரோக்கியமானதொரு மனிதனாகவே இருக்க விரும்புகிறேன்.”

பிரதமர் என்ற வகையில் அவர் நிறைய பயணம் செய்ய வேண்டியிருப்பதோடு, ஏராளமான விருந்துகளிலும் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். ஒவ்வொரு விருந்திலும் பரிமாறப்படும் அந்தந்தப் பகுதியின் சைவ உணவை அவர் மிகவும் விரும்பி உண்பார். மது அருந்தும் பழக்கம் இல்லாதவர் என்பதால் இந்த விருந்துகளில் அவர் கையில் இருக்கும் கோப்பையில் ஏதோவொரு வகையான மதுவிற்குப் பதிலாக தண்ணீரோ அல்லது பழரசமோதான் இருக்கும்.Share your ideas and suggestions for 'Mann Ki Baat' now!
Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
How 5G Will Boost The Indian Economy

Media Coverage

How 5G Will Boost The Indian Economy
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
எழுச்சியூட்டும் பிரதமர்
September 07, 2022
பகிர்ந்து
 
Comments

பிரதமர் மோடியை சந்திக்கும் அல்லது அவருடன் உரையாடும் வாய்ப்பை பெறும் அனைவரும், அவரை ஒரு எழுச்சியூட்டும் தலைவர் மற்றும் ஆர்வமாக கேட்பவர் என்று குறிப்பிடுகிறார்கள். ஓயோ நிறுவனத் தலைவர் ரித்தேஷ் அகர்வாலும் இதேகருத்தை தெரிவித்துள்ளார். சுற்றுலா மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பாக பிரதமர் மோடியுடன் உரையாடும் வாய்ப்பு ரித்தேஷ் அகர்வாலுக்கு கிடைத்தது. பிரதமருடன் அவர் நடத்திய உரையாடல், ஒரு புதிய வணிக மாதிரியை மேம்படுத்த அவருக்கு உதவியது.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மோடி பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கும் திறன் கொண்டவர் என்று விவரித்துள்ளார். ஆனால், சாதாரண அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்தும் விவாதிக்கக் கூடியவர்.   

 பிரதமர் கூறிய ஒரு உதாரணத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். பிரதமரை மேற்கோள் காட்டிய ரித்தேஷ், “இந்தியா ஒரு விவசாயப் பொருளாதாரம். இந்தியாவில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். அவர்களின் வருமானத்தில் பலநேரங்களில் மாற்றம் ஏற்படலாம். இன்னொருபுறம், கிராமங்களுக்கு செல்லவும், தங்குமிடத்தை தேடவும், அதன் இனிய அனுபவத்தை பெற விரும்பும் மக்களும் வசிக்கின்றனர். இந்த விவசாயிகளுக்கு நிலையான, நீண்ட வருமானம் கிடைப்பதற்கும், நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் உண்மையான கிராம வாழ்க்கையின் அனுபவத்தை பெறவும் நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது?

கிராமப்புற சுற்றுலா குறித்து பிரதமருடன் உரையாடியது, எவ்வாறு பல விவசாயிகளுக்கும், கிராமப்புற குடும்பத்தினருக்கும் நிலையான வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பாக மாறியது என்பதை ரித்தேஷ் பகிர்ந்து கொண்டார். ஒரு விஷயம் குறித்த பிரதமரின் ஆழ்ந்த, அகலமான பார்வை, திறமை தான் அவரை ஒரு எழுச்சியூட்டும் தலைவராக மாற்றியது என்று ரித்தேஷ் சுட்டிக்காட்டினார்.

பயணம், சுற்றுலா மட்டுமின்றி, எந்த துறை சார்ந்த விஷயங்கள் குறித்தும் விவாதிக்கும் திறனும், ஆழமும் பிரதமர் மோடிக்கு உள்ளதாக ரித்தேஷ் குறிப்பிட்டார். உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் குறித்து பேசும்போது, “டேட்டா சென்டர்களை விரிவுப்படுத்துவது. சூரியசக்தி முதல் எத்தனால் வரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது, இந்தியாவில் பேனல்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் என்ன, அது ஒரு நிறுவனத்துக்கு எவ்வாறு பலனளிக்கும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் குறித்து மோடி விவாதிப்பதை நான் பார்த்துள்ளேன். உள்கட்டமைப்பு குறித்து நாம் பேசும்போதெல்லாம், சாலைகள், ரயில்வே, மற்றும் நெடுஞ்சாலைகள் என்ற விவாதங்களில் நாம் ஈடுபடுகிறோம். ஆனால், தொழில்துறையின் பிரதிநிதியான பிரதமரை சந்திக்கும் போதெல்லாம், அவர் நுகர்வோர், மின்னணுவியல் குறித்து விவாதிப்பதை நான் கண்டுள்ளேன். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் இந்த ஆண்டு இந்தியா ஒரு மிகப்பெரிய ஒற்றை நாடாக இருக்கும். இந்தியா ட்ரோன் உற்பத்தி மற்றும் அதுதொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாறியுள்ளது. ஒவ்வொரு தொழிலிலும் இவ்வளவு ஆழமான பார்வை இருப்பது இணையற்றது. இதுதான் அந்த தொழில்களை விரைவாக வளர்ச்சியடைய வைக்கிறது.

பிரதமர் மோடி, மிகவும் ஆர்வமாக கேட்பவர் என்று ரித்தேஷ் கூறினார். மத்திய நிதிநிலை அறிக்கைக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதை ரித்தேஷ் நினைவுகூர்ந்தார். “சுற்றுலாவை விரிவுப்படுத்த வேண்டுமெனில், பெரிய அளவிலான, நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடுகளை  நாம் மேம்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் தொழில் நன்மை பெறும் என்று பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டினார். குஜராத்தில் உள்ள கெவாடியா இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும், ஒற்றுமை சிலையை சுற்றியுள்ள இடங்கள் அங்கு உணவகத் தொழில் மேம்பட எவ்வாறு உதவியது என்றும் ரித்தேஷ் மேலும் கூறினார். ஐந்து, பத்து, பதினைந்து வருடங்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை பற்றிய தொலைநோக்குப் பார்வைதான் ஒரு சிறந்த சீர்திருத்தவாதி மற்றும் மதிப்புகளை உருவாக்குபவர்” என்று ரித்தேஷ் குறிப்பிட்டார்.  இந்த முறையில் பிரதமர் மோடியை நான் கவரும் தலைவராகக் கண்டேன் என்றும் ரித்தேஷ் தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு புதிய தொழில்முனைவோருக்கு உரிய பல்வேறு பண்புகள் உள்ளதாக ரித்தேஷ் கூறினார். பிரதமர் மோடி பெரிய அளவில் சிந்திக்கிறார். அதை செயல்படுத்துவதற்கு முன் அவர் சில சிறிய பரிசோதனைகளை செய்து பார்க்கிறார். பெரிய அளவிலான முன்முயற்சிகளை காண்பது மற்றும் அவற்றின் செயல்பாடுகளை மிக உன்னிப்பாக கண்காணிப்பது மோடியின் திறமை என்று ஓயோ நிறுவனத் தலைவர் கூறினார். “எங்கள் நாட்டில் உள்ள ஒரு தலைவர் அதிக பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் திருப்தி அடையவில்லை. உலகில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற லட்சியமும், உத்வேகமும் கொண்ட 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நாடு எங்கள் நாடு” என்று தெரிவித்தார்.

பொறுப்பு துறப்பு:

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்கள் வாழ்வில் அவர் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய மக்களின் கருத்துகள், பகுப்பாய்வு உள்ளிட்டவற்றை விவரிக்கும் ஒரு முயற்சி இது.