2026-27 சந்தைப் பருவத்திற்கு பதப்படுத்தப்படாத சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2026-27 சந்தைப் பருவத்திற்கு பதப்படுத்தப்படாத சணலுக்கான (டிடி-3 வகை) குறைந்தபட்ச ஆதரவு விலை குவின்டாலுக்கு ரூ.5,925 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவைவிட குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டிற்கு இணங்க இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2025-26 சந்தைப் பருவத்தைவிட தற்போது குவின்டாலுக்கு ரூ.275 அதிகரிக்கப்பட்டுள்ளது.
अपने जूट उत्पादक किसान भाई-बहनों का जीवन आसान बनाने के लिए हम कोई कोर-कसर नहीं छोड़ रहे हैं। इसी दिशा में हमारी सरकार ने कच्चे जूट की MSP को बढ़ाने का महत्वपूर्ण निर्णय लिया है। इससे न सिर्फ इसके उत्पादन और क्वालिटी को बढ़ावा मिलेगा, बल्कि इस सेक्टर से जुड़े देशभर के किसानों की…
— Narendra Modi (@narendramodi) February 24, 2026


