Centre to spend Rs. 25,530 crore in next 5 years for SARTHAK PDS
Continuation of schemes to ensure last-mile delivery of Food grains with higher FPS Dealers’ commission
Government strive for intelligently optimized PDS operations through advanced technologies to ensure transparency, security and sustainability in PDS operations

பொது விநியோக அமைப்பில் தன்னியக்கத்துடன் கூடிய ரேஷன் போக்குவரத்து மற்றும் வருமானத்தைக் கையாள்வதற்கான உதவி (சர்தாக்-பிடிஎஸ்) திட்டத்தை ஒருங்கிணைந்தத் திட்டமாகத் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு 16வது நிதி ஆணையத்தின் சுழற்சி காலகட்டத்தில், மத்திய அரசின் பங்காக ரூ. 25,530 கோடி நிதி ஒதுக்கப்படும். 

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான, மாநிலங்களுக்குள்ளான உணவு தானியப் போக்குவரத்து, கையாளுதல், நியாயவிலைக் கடை முகவர்களின் லாப வரம்பு ஆகியவற்றால் ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கான மத்திய உதவியின் விதிமுறைகளைத் திருத்தவும், தற்போதுள்ள மத்திய உதவி நிதி முறையைத் தொடரவும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது.

சார்தக்-பிடிஎஸ் திட்டம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது:

 (அ) மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து, கையாளுதல், மற்றும் நியாயவிலைக் கடை விற்பனை முகவர்களின் லாப வரம்பு ஆகியவற்றிற்கு உறுதியான நிதி ஆதரவை வழங்குதல்.

 (ஆ) கடைக்கோடிப் பகுதிக்கு சேவை வழங்கலை உறுதிசெய்து, கசிவுகளைக் குறைத்து, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்  கீழ் உணவுப் பாதுகாப்பிற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஓர் ஒருங்கிணைந்த, குடிமக்களை மையமாகக் கொண்ட பொது விநியோகக் கட்டமைப்பை உருவாக்குதல். இந்த ஒருங்கிணைந்த திட்டம் 31.03.2031 வரை செயல்படும்.

பொது விநியோகச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நிகழ்நேரக் கண்காணிப்புக்கான தரப்படுத்தப்பட்ட கட்டமைப்புகள், ஒருங்கிணைக்கப்பட்ட தரவுத்தளங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த குறைதீர்ப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்புகள், தரவு சார்ந்த மேற்பார்வைக்கான மாநிலக் கட்டுப்பாட்டு மையங்கள், ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற நடைமுறைக் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், செயற்கை நுண்ணறிவு , எந்திரக் கற்றல் , இயற்கை மொழி செயலாக்கம், பிளாக்செயின் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பொது விநியோகச் செயல்பாடுகளை நவீனமாக்கவும், ஒருங்கிணைக்கவும் சார்தக்-பிடிஎஸ் திட்டம் முற்படுகிறது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
UPI — an eventful journey

Media Coverage

UPI — an eventful journey
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 25, 2026
August 25, 2026

Nari Shakti to Capital Markets: PM Modi’s Reforms Are Rewiring India’s Growth Story