
9வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரிக்ஸ் தலைவர்களின் பிரகடனத்தில் உறுப்புநாடுகளிடையே நடைமுறையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நியாயமான மற்றும் சீரான சர்வதேச பொருளாதார நிலைமையை உருவாக்க உலகளாவிய பொருளாதார நடைமுறைகளில் ஒத்துழைப்பையும் தகவல் பரிமாற்றத்தையும் மேம்படுத்துவது குறித்து அதில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையையும் இது வலியுறுத்தியுள்ளது.



