பிரதமர் மோடி தமது சமூக வலைதள கணக்குகளைப் பெண்களுக்கு 'அவள் நம்மை ஊக்குவிக்கிறாள்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகத் தந்த போது, கல்பனா ரமேஷ் தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும், தண்ணீர் சேமிப்பு குறித்தும் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தண்ணீர்ப் போராளி என அழைக்கப்படும் கல்பனா, தண்ணீரைப் பாதுகாத்து நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சேமித்து வைப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்த வருகிறார். சிறு முயற்சிகளே பெரிய விளைவுகளை உருவாக்கும் என அவர் நம்புகிறார்.
பிரதமர் மோடியின் டிவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு எழுதுகிறார்: "தண்ணீர், நமக்குக் கிடைத்துள்ள பெருமதிப்புடைய சொத்து. நமது சந்ததியினருக்கு நாம் அதை கிடைக்காமல் செய்ய வேண்டாம். தண்ணீரைப் பொறுப்புடன் பயன்படுத்தியும், மழை நீரை சேமித்தும், ஏரிகளைப் பாதுகாத்தும், தண்ணீரை மறுசுழற்சி முறையில் உபயோகப்படுத்தியும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும் நம்மால் ஆனதைச் செய்வோம்."
தன்னால் பறவைகளை மீண்டும் ஒரு ஏரிக்கு வரவழைக்க முடியுமென்றோ, பிரதமரின் டிவிட்டர் பக்கத்திலிருந்து பதிவிட முடியுமென்றோ கற்பனை கூட செய்ததில்லை என்று கல்பனா கூறுகிறார். ஒருவர் தன்னால் முடியும் என நினைத்தால், மிகவும் கடினமான செயல்களை கூட செய்து முடிக்கலாம், நீராதாரங்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் கூட்டாக செயல்பட்டால் சமூகத்தில் நாம் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனக் கூறுகிறார். ஒருங்கிணந்த “நாம் சிக்கல்களைத் தீர்ப்பவர்களாக இருப்போம்," என்று கல்பனா கூறினார்.
Be a warrior but of a different kind!
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
Be a water warrior.
Have you ever thought about water scarcity? Each one of us can collectively act to create a water secure future for our children
Here is how I am doing my bit. @kalpana_designs pic.twitter.com/wgQLqmdEEC


