அசாம் காவல்துறையால் வடிவமைக்கப்பட்ட 'அஸ்ஸாம் காப்' மொபைல் செயலியை அறிமுகம்
"குவஹாத்தி உயர்நீதிமன்றம் அதன் சொந்த பாரம்பரியம் மற்றும் அடையாளத்தைக் கொண்டுள்ளது"
"ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் நீதித்துறையானது 21ஆம் நூற்றாண்டில் இந்தியர்களின் எல்லையற்ற விருப்பங்களை நிறைவேற்றுவதில் வலுவான முக்கியப் பங்கு வகிக்கிறது"
"நாங்கள் ஆயிரக்கணக்கான பழமையான சட்டங்களை ரத்து செய்தோம் இணக்கங்களைக் குறைத்தோம்"
"அரசாக இருந்தாலும் சரி, நீதித்துறையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு அமைப்பின் பங்கும் அதன் அரசியலமைப்பு கடமையும் சாமானிய குடிமக்களின் வாழ்க்கை வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது"
"நாட்டில் நீதி வழங்கும் முறையை நவீனமயமாக்க தொழில்நுட்பத்திற்கு வரம்பற்ற வாய்ப்பு உள்ளது"
"செயற்கை நுண்ணறிவு மூலம் சாதாரண குடிமகனின் நீதியை எளிதாக்குவதற்கான முயற்சிகளை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்"

அசாம் மாநில ஆளுநர் திரு குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்களே, அருணாச்சலப்பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதி திரு ரிஷிகேஷ் ராய் அவர்களே, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சந்தீப் மேத்தா அவர்களே, மாண்புமிகு நீதிபதிகளே, பிரதிநிதிகளே, சகோதர, சகோதரிகளே வணக்கம்.

 கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில் கவுகாத்தி உயர்நீதிமன்றம் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அனுபவத்தைப் பாதுகாத்து, புதிய இலக்குகளை அடைவதற்கான பொறுப்பான மாற்றங்களோடு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய தருணம் இது. கவுகாத்தி உயர்நீதிமன்றம் அதன் சொந்த பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் கொண்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய அண்டை மாநிலங்களை உள்ளடக்கிய கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மிகப்பெரியது. 2013 ஆம் ஆண்டு வரை கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் ஏழு மாநிலங்கள் இருந்தன. அதனுடன் தொடர்புடைய முழு வடகிழக்கின் வளமான வரலாறு மற்றும் ஜனநாயக பாரம்பரியம் காணப்பட்டது. இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், முழு வடகிழக்கு மாநிலங்களுடனும், குறிப்பாக சட்ட சகோதரத்துவத்துடன் அஸ்ஸாம் மாநிலத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். சமத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகிய அரசியலமைப்பு மதிப்பீடுகளே நவீன இந்தியாவின் அடித்தளம் ஆகும்.

 

நண்பர்களே,      

கடந்த சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து எடுத்துரைத்த இந்தியாவின் லட்சிய சமுதாயத்தைப் பற்றிய விரிவாக எடுத்துரைத்தேன். 21ஆம் நூற்றாண்டில் இந்திய மக்களின் விருப்பங்கள் எல்லையற்றவை. ஜனநாயகத்தின் தூணாக நீதித்துறை இந்த விருப்பங்களை நிறைவேற்றுவதில் வலுவான முக்கியப் பங்கு வகிக்கிறது. வலுவான, துடிப்பான மற்றும் நவீன சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அரசியலமைப்பு எதிர்பார்க்கிறது. சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பொறுப்பு முக்கியம் வாய்ந்ததாகும். நாங்கள் ஆயிரக்கணக்கான பழமையான சட்டங்களை ரத்து செய்தோம், இணக்கங்களைக் குறைத்தோம். இதுபோன்ற சுமார் 2000 சட்டங்கள் மற்றும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணக்கங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் குற்ற நீக்கம் நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.

 

அரசாக இருந்தாலும் சரி, நீதித்துறையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு அமைப்பின் பங்கும் அதன் அரசியலமைப்புக் கடமையும் சாமானிய குடிமக்களின் வாழ்க்கை வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எளிமையாக வாழ்வதற்கு தொழில்நுட்பம் ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது. சாத்தியமான ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதை அரசு உறுதி செய்துள்ளது.  ஆதார் மற்றும் டிஜிட்டல் இந்தியா மிஷன்  இதற்கு உதாரணமாகும். ஒவ்வொரு திட்டமும் ஏழைகளின் உரிமைகளை உறுதி செய்யும் ஊடகமாக மாறியுள்ளது. பிரதமர் ஸ்வாமித்வா யோஜனா மூலம் சொத்துரிமைப் பிரச்சினையைக் கையாளுவதில் இந்தியா பெரும் முன்னிலை வகித்துள்ளது. இதனால் சட்டஅமைப்பு சுமைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. வளர்ந்த நாடுகள் கூட சொத்துரிமை பிரச்சினையை கையாள்வதில் தெளிவற்ற தண்மையைக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் ட்ரோன் மேப்பிங் செய்து, லட்சக்கணக்கான குடிமக்களுக்கு சொத்து அட்டை விநியோகம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சொத்து தொடர்பான வழக்குகளைக்  குறைத்து குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.

 

நண்பர்களே,

நாட்டில் நீதி வழங்கும் முறையை நவீனமாக்க தொழில்நுட்பத்திற்கு வரம்பற்ற வாய்ப்பு இருக்கிறது. உச்சநீதிமன்ற இ-கமிட்டியின் பணிகள் பாராட்டத்தக்கவை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இ-நீதிமன்ற பணியின் 3-ம் கட்டம் குறிப்பிடத்தக்கது. நீதித்துறை அமைப்பில் திறமையைக் கொண்டுவர  செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகள் அவசியமாகும். செயற்கை நுண்ணறிவு மூலம் சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பதை எளிதாக்கும் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.

வழக்குக்கான மாற்றுத் தீர்வு முறை, வடகிழக்கின் வளமான பாரம்பரிய உள்ளூர் மாற்றுத் தீர்வு முறை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வழக்காறு சட்டங்கள் குறித்த 6 புத்தகங்களை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது. இந்த மரபுகளை சட்டக் கல்லூரிகளில் கற்பிக்க வேண்டும்.

 

நாட்டின் சட்டங்களைப் பற்றிய சரியான அறிவும் புரிதலும்தான் நீதியை எளிதாக்குவதற்கான முக்கியமான பகுதியாகும். இதுவே நாட்டின் மீதும் அதன் அமைப்புகளின் மீதும் மக்களின்  நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அனைத்து சட்டங்களின் எளிமையான பதிப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எளிய மொழியில் சட்டங்களை உருவாக்கும் முயற்சி இருக்கிறது. இந்த அணுகுமுறை நம் நாட்டின் நீதிமன்றங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு குடிமகனும் தங்கள் சொந்த மொழியில் இணையத்தை அணுக உதவுவதை நோக்கமாகக் கொண்ட பாஷிணி இணையப்பக்கத்தால், நீதிமன்றங்களும் பயனடைகின்றன.

 

நண்பர்களே,

 

சிறு குற்றங்களுக்காகப் பல ஆண்டுகள் சிறையில் வாடும், வளமோ, பணமோ இல்லாதவர்களிடம் அரசும், நீதித்துறையும் அக்கறையுடன் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்த பிறகும் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக குடும்பங்கள்  இல்லாத சூழல் நிலவுகிறது. இத்தகைய கைதிகளுக்கு நிதியுதவி அளிக்க இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் விடுதலைக்கு உதவும் வகையில் மத்திய அரசால் மாநிலங்களுக்கு  நிதி உதவி வழங்கப்படும்.

 

 

“தர்மத்தைப் பாதுகாப்பவர்களை தர்மம் பாதுகாக்கிறது”,  என்பது வேதத்தில் உள்ள ஒரு ஸ்லோகமாகும். நமது ‘தர்மம்’ என்பது தேசத்திற்கான பணியை முதன்மையாக கொள்வதாகும். இதுவே நமது பொறுப்பாகும். இந்த நம்பிக்கைதான் நாட்டை ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model

Media Coverage

IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 13, 2026
June 13, 2026

Viksit Bharat Accelerating: Tech, Defense, Infra & Exports Power India's Global Leap Under the Leadership of PM Modi