“அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன”
“இந்தியப் பொருளாதாரம் இன்று விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது”
“புதிய வாய்ப்புகளுக்கு கதவுகளைத் திறக்கும் வகையிலான கொள்கைகள் மற்றும் உத்திகளுடன் இன்றைய புதிய இந்தியா நகர்கிறது”
“2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா கடந்த காலத்தின் எதிர்வினை நிலைக்கு மாறாக ஒரு செயலாக்க அணுகுமுறையைக் கொண்டுள்ளது”
“21-ம் நூற்றாண்டின் 3-வது பத்து ஆண்டுகளில் கடந்த காலங்களில் யூகிக்க முடியாத அளவிற்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன”
“தற்சார்பு இந்தியா இயக்கத்தின் அணுகுமுறையும், சிந்தனையும் சுதேசியையும், உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவையும் கொண்டுள்ளது. தற்சார்பு இந்தியா இயக்கம் கிராமங்கள் முதல், நகரங்கள் வரை கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இயக்கமாகும்
“கிராமங்களில் சாலை வசதிகள் அமையும் போது ஒட்டுமொத்த சூழலிலும் படிப்படியான வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கிறது”
“அரசுப் பணியாளராக உள்ள நீங்கள், சாதாரண குடிமகனாக உணர்ந்த அனுபவங்கள

இன்று பைசாகி திருநாள். இதனையொட்டி அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சிகரமான நாளில் 70,000 மேற்பட்ட இளைஞர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அரசு பணிகளை பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் அனைவருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர் அவர்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  பிரகாசமான எதிர்காலத்திற்காக எனது வாழ்த்துக்களை நான் உரித்தாக்குகிறேன். 

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை அறிய திறன்மிக்க இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளை அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது.   தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆளும் மாநிலங்களான குஜராத் முதல் அசாம் வரையும், உத்தரப்பிரதேசம் முதல் மகாராஷ்டிரா வரையும் அரசுப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் நேற்று மட்டும் 22,000-த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் இளைஞர்களையொட்டிய நமது உறுதிப்பாட்டுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆதாரமாகத் திகழ்கிறது.

 

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. பொருளாதார மந்தநிலை மற்றும் தொற்று பாதிப்பு போன்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவை பிரகாசமான வளர்ச்சி கொண்ட நாடாக உலகம் பார்க்கிறது. தற்போதைய புதிய இந்தியா, புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் வகையில் கொள்கைகள் மற்றும் யுக்திகளுடன் முன்னேறி வருகிறது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு செயல்திறன் மிக்க அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகிறது. இது முந்தைய காலத்தை விட திறன் வாய்ந்த மாற்றத்தை கொண்டது. இந்த நல்ல மாற்றம் காரணமாக 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாம் ஆண்டில் வேலை வாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்புகள் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு இல்லாத துறைகளை தற்போது கண்டறிந்து வளர்ச்சிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்கள்  மூலம் 40 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை இந்திய இளைஞர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ட்ரோன்கள் மற்றும் விளையாட்டுத் துறையின் வேலை வாய்ப்புகளுக்கான புதிய வழிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

 

நண்பர்களே,

சுதேசி எனப்படும் உள்ளூர் உற்பத்தி மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்து ஆதரவளிப்பது என்ற கொள்கைகளைத் தாண்டிய தன்மை கொண்டதாக தற்சார்பு இந்தியா இயக்கத்தின் அணுகுமுறைகளும், சிந்தனைகளும் உள்ளன. தற்சார்பு இந்தியா இயக்கம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய இயக்கமாக உள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செயற்கை கோள்கள் மற்றும் அதிவேக ரயில்கள் இதற்கு சான்றாக அமைகின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளில் உள்நாட்டிலேயே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்ஹெச்பி ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டிகளுக்கான தொழில்நுட்பமும் மூலப் பொருட்களும் இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளன.

நண்பர்களே,

இந்தியாவின் பொம்மைத் தொழில் துறை இதற்கு உதாரணமாகும். இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளைக் கொண்டே இந்தியக் குழந்தைகள் பல ஆண்டு காலமாக விளையாடி வந்தன. அந்த பொம்மைகள் தரமானதாக இல்லை என்பதுடன், அவற்றின் வடிவமைப்பும் இந்தியக் குழந்தைகளை மனதில் வைத்து உருவாக்கப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கான தர நிர்ணய அளவீடுகளை அரசு வகுத்துள்ளதுடன் உள்நாட்டிலேயே பொம்மை உற்பத்தித் தொழிலை அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பொம்மைத் தொழில்துறை முற்றிலும் மாற்றமடைந்துள்ளது. இத்துறை ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

 

பாதுகாப்பு உபகரணங்களில் இந்தியா இறக்குமதி செய்தே ஆக வேண்டும் என்று பல ஆண்டுகளாக பரவலான மனநிலை இருந்து வந்தது. இதை மாற்றும் வகையில் பாதுகாப்புத்துறையில் அணுகுமுறையை மாற்றி உள்நாட்டு உற்பத்தியை அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் விளைவாக இந்திய ஆயுதப்படைகளுக்குத் தேவையான 300க்கும் மேற்பட்ட தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவற்றை உள்நாட்டில் மட்டுமே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் ரூ.15,000 கோடி மதிப்புள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் உலகில் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே,

 கடந்த சில ஆண்டுகளில் செல்பேசி உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அளப்பரியது. உள்ளூர் உற்பத்திக்கு ஊக்கமளித்தல், அதற்கு மானியம் வழங்குதல், காரணமாக இந்தியா பெருமளவு அந்நியச் செலாவணியை சேமித்துள்ளது. உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்திருப்பதோடு செல்பேசிகளை இந்தியா தற்போது ஏற்றுமதி செய்கிறது.

 

 வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காக அடிப்படைக் கட்டமைப்பில் முதலீட்டின் பங்களிப்பு அவசியமானதாகும். மூலதனச் செலவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், கட்டிடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடிப்படைக் கட்டமைப்பால் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போதைய அரசின் பதவிக் காலத்தில் மூலதனச் செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

2014-ம் ஆண்டுக்கு முந்தைய மற்றும் பிந்தையை வளர்ச்சிப் பணிகளை  ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 2014-க்கு முந்தைய ஏழு ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் வெறும் 20,000 கிலோமீட்டர் ரயில்பாதை மட்டுமே மின்மயமாக்கப்பட்ட நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் 40,000 கிலோ மீட்டர் ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டிற்கு முன் மாதந்தோறும் 600 மீட்டராக இருந்த மெட்ரோ ரயில் தடங்கள் அமைப்பது தற்போது 6 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன் 70-க்கும் குறைவான மாவட்டங்களில் மட்டுமே இருந்த எரிவாயு வலைப்பின்னல் எண்ணிக்கை தற்போது 630 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது. ஊரகப்பகுதிகளில் சாலைகளின் நீளம், 2014-ம் ஆண்டுக்கு முன் 4 லட்சம் கிலோ மீட்டர் என்பதிலிருந்து தற்போது 7 லட்சம் கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. கிராமங்களுக்கு சாலைகள் செல்வதால், ஒட்டுமொத்த பகுதியிலும் விரைவான வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கிறது.

நண்பர்களே,

 விமானப் போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை, 2014-ல் 74-ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 148-ஆக அதிகரித்துள்ளது. துறைமுகப்பிரிவிலும் இதேபோன்ற வளர்ச்சி காணப்படுகிறது. சரக்குகளைக் கையாள்வதில் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், இருமடங்கு அதிகரித்திருப்பதால், பெருமளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

2014-ம் ஆண்டுக்கு முன் நாட்டில் 400க்கும் குறைவாகவே மருத்துவக்கல்லூரிகள் இருந்தன. தற்போது 660 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. 2014-ல் இளநிலை மருத்துவப்படிப்புக்கான இடங்கள் 50 ஆயிரம் என்பதிலிருந்து ஒரு லட்சமாக அதிகரித்தது. இதனால் பட்டம் பெறும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் இருமடங்காகியுள்ளன.

 ஊரகப் பகுதிகளில், வேளாண் துறையில் 2014ம் ஆண்டிற்குப் பிறகு விவசாயிகள் உற்பத்திப் பொருட்களின் ஒருங்கிணைப்புத் திட்டங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு லட்சக்கணக்கான கோடிகளில் உதவிகளும், மேம்படுத்தப்பட்ட சேமிப்பு வசதிகள், 3 லட்சம் பொது சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப் புறங்களில் 6 லட்சம் கிலோமீட்டர் தொலைவிற்கு கண்ணாடி இழைப் பதிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு அதில் இதுவரை 2.5 கோடி வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இது தவிர 10 கோடி கழிப்பறைகள் மற்றும் 1.5 லட்சம் நல்வாழ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.

நண்பர்களே,

 வளர்ந்து வரும் தொழில்முனைவுத்திறன் மற்றும் சிறுதொழில்
நிறுவனங்களை அரவணைத்துச் செல்லும் போக்கு தற்போது நிலவுகிறது. பிரதமரின் முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகளில் சுமார் ரூ.23 லட்சம் கோடி மதிப்பிலான உத்தரவாதம் இல்லாத கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 70% பேர் பெண் பயனாளிகள் ஆவார். இந்தத் திட்டம் 8 கோடி புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது. இவர்கள் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் கடன் பெற்று முதல்முறையாக சிறு வியாபாரங்களைத் தொடங்கியிருப்பவர்கள் ஆவர். அடிப்படை ஆரம்ப நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நுண் பொருளாதாரத்தின் ஆற்றல் அவசியமாகும்.

நண்பர்களே,

இன்று பணி நியமன ஆணைகளை பெற்றிருப்பவர்கள் நாட்டின் மேம்பாட்டிற்கு தங்களது பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பாக கருதி, வரும் 2047 ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும் இலக்கை நோக்கிப் பயணம் செய்யுங்கள். இன்று, அரசு ஊழியராக உங்களது பயணத்தைத் தொடங்குங்கள். இந்தப் பயணத்தின் போது உங்களை சாதாரணக் குடிமகனாக உணர்த்திய தருணங்களை நினைவில் கொள்ளுங்கள். அரசிடமிருந்து புதிதாக பணியில் இணைபவர்கள், மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொறுப்பை கொண்டுள்ளனர். உங்கள் ஒவ்வொருவரின் பணியும் பொதுமக்களின் வாழ்க்கையில் ஏதோவொரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உங்களது பணிகளின் மூலம் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களின் வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கான வழிகளில் செயல்படுங்கள். இறுதியாக, புதிதாகப் பணியில் சேர்பவர்கள் தங்களது கற்கும் முயற்சிகளை ஒருபோதும் நிறுத்திட வேண்டாம். புதிதாக அறிந்து கொள்ளும் அனைத்து விஷயங்களும் உங்களது பணிகளிலும், ஆளுமைத் திறனிலும் பிரதிபலிக்கும். ஆன்லைனில் கற்கும் வலைதளமான கர்மயோகி மூலம் உங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

நண்பர்களே,

பைசாகி புனித நாளில் உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பது சிறப்பானதாகும். மீண்டும் ஒரு முறை தங்களது வாழ்க்கை பிரகாசம் மிகுந்ததாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's services exports rise by 12.7 pc in April despite West Asia crisis: RBI

Media Coverage

India's services exports rise by 12.7 pc in April despite West Asia crisis: RBI
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets people of Goa on Goa Statehood Day
May 30, 2026

The Prime Minister, Shri Narendra Modi, today extended his greetings to the people of Goa on the occasion of Goa Statehood Day.

The Prime Minister said that Goa is widely known for its vibrant culture, rich heritage, natural beauty and warm-hearted people.

The Prime Minister noted that the occasion is an opportunity to remember with gratitude all those who worked tirelessly for the progress and identity of Goa.

The Prime Minister expressed hope that Goa will continue to prosper and play an important role in building a Viksit Bharat.

Shri Modi also prayed for the good health and prosperity of every Goan.

The Prime Minister wrote on X;

“Greetings to the people of Goa on the special occasion of Goa Statehood Day. Goa’s vibrant culture, rich heritage, natural beauty and warm-hearted people are widely known. This day is also an opportunity to remember with gratitude all those who worked tirelessly for its progress and identity. May Goa continue to prosper and play an important role in building a Viksit Bharat. Praying for the good health and prosperity of every Goan.”