Quoteகுவாஹத்தி எய்ம்ஸ் மற்றும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quote‘உங்கள் வீடுதேடி மருத்துவம்’ இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்
Quoteஅசாம் நவீன சுகாதார நலன்சார்ந்த புதிய கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார்
Quote"கடந்த ஒன்பது ஆண்டுகளில் வடகிழக்கில் சமூக உள்கட்டமைப்பு கணிசமாக மேம்பட்டுள்ளது"
Quote"நாங்கள் மக்களுக்கு 'சேவை மனப்பான்மை' யுடன் பணியாற்றுகிறோம்"
Quote"வடகிழக்கின் வளர்ச்சி மூலம் இந்தியாவின் வளர்ச்சி என்ற மந்திரத்துடன் நாம் முன்னேறி வருகிறோம்"
Quote"அரசின் கொள்கை, நோக்கங்கள், அர்ப்பணிப்பு ஆகியவை சுயநலத்தால் இயக்கப்படவில்லை, மாறாக 'தேசமே முதலில் - மக்களே முதலில்' என்ற உணர்வால் இயக்கப்படுகிறது"
Quote"வாரிசு அரசியல், பிராந்தியவாதம், ஊழல் மற்றும் உறுதியற்ற தன்மை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும்போது வளர்ச்சி சாத்தியமற்றது"
Quote"எங்கள் அரசால் தொடங்கப்பட்ட திட்டங்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் பயனளிக்கின்றன"
Quote"எங்கள் அரசு 21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப இந்தியாவின் சுகாதாரத் துறையை நவீனமயமாக்குகிறது"
Quote"அனைவரின் முயற்சி என்பது இந்திய சுகாதார அமைப்பில் மாற்றத்திற்கான மிகப்பெரிய அடிப்படை"

அசாம் ஆளுநர் திரு. குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களே, இணையமைச்சர் டாக்டர் பாரதி பவார் அவர்களே, அசாம் மாநில அமைச்சர் திரு. கேசப் மஹந்தா அவர்களே,  உங்கள் அனைவருக்கும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு எனது உரையைத் தொடங்குகிறேன்.

 

|

குவஹாத்தியில் எய்ட்ஸ் மருத்துவமனை இன்று திறக்கப்பட்டிருப்பதன் மூலம், அசாம் மாநில சுகாதார உள்கட்டமைப்பும்,  வடகிழக்கு மாநிலங்களும் புதிய உத்வேகம் பெற்றுள்ளன.  ஏனெனில் இன்று வடகிழக்கு மாநிலங்கள் தங்களது முதல் எய்ம்ஸ் மருத்துவமனையைப் பெற்றிருக்கிறன்றன. மேலும் அசாமில் 3 புதிய மருத்துவக்கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.

சகோதர சகோதரிகளே,

வடகிழக்கு மாநிலங்களில் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் வியக்கத்தகு வளர்ச்சி அடைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில், பல் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வாரிசு அரசியல், மதவாதம், ஊழல் உள்ளிட்டவற்றால் கடந்த சகாப்தங்களில் பல்வேறு சவால்களை சந்தித்துவந்த வடகிழக்கு மாநில மக்கள், எங்கள் ஆட்சியல் அவற்றில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைந்திருக்கின்றனர். எங்கள் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதற்கு, குவஹாத்தி எய்ம்ஸ் மாபெரும் உதாரணம்.

 

|

நண்பர்களே,

மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறை நிபுணர்களின் பற்றாக்குறையை நாடு இன்று சந்தித்துவருவதற்கு முந்தைய அரசுகளின் கொள்கைகளே காரணம்.  2014ம் ஆண்டிற்கு முன்பு, 150 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை,  கடந்த 9 ஆண்டுகளில் எங்கள் ஆட்சியில் 300ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், மருத்துவக் கல்வி மேம்பாட்டிற்காக,  தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதுடன், நடப்பாண்டு பட்ஜெட்டில்,  150 செவிலியர் கல்லூரிகள் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

|

சகோதர சகோதரிகளே, 

கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்தியில் ஆளும், நிலையான மற்றும் வலிமையான ஆட்சியின் பயனாக, இந்தியாவில் சுகாதாரத்துறை இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது.  நாட்டு மக்களுக்கே முன்னுரிமை என்ற சுயநலமில்லாத பிஜேபி அரசின் கொள்கைகள் மூலமே இத்தகைய முன்னேற்றம் சாத்தியமானது. 

 

|

நண்பர்களே,

நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டே, 9 ஆயிரம் மலிவு விலை மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், மத்திய அரசு சார்பில் 1.5 லட்சம் சுகாதார நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் காசநோயை இந்தியாவில் இருந்து அறவே ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் ரூ.80 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டிருக்கிறது.

 

|

தூய்மை இந்தியாத் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு கழிவறைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிக்சை, மகப்பேறு கால நிதிஉதவி, ராஷ்டிரிய போஷான் அபியான் திட்டத்தின் மூலம் மகளிருக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைப்பதை உறுதி செய்தல் என பல்வேறு மகாத்தானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

சகோதர சகோதரிகளே,

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின் கீழ், 38 கோடி பேருக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதுடன், இ-சஞ்ஜீவனி தொலைதூர மருத்துவம் மூலம், 10 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டதால்தான் கொரோனா பெருந்துந்தொற்றில் இருந்து விரைவில் மீண்டுவர முடிந்தது. எனவே அதே உத்வேகத்தையும், ஒத்துழைப்பையும்  சுகாதார இந்தியா இயக்கத்திற்கும் அளித்து வளமான இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறி பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India gets an 'F35' stealth war machine, but it's not a plane and here’s what makes it special

Media Coverage

India gets an 'F35' stealth war machine, but it's not a plane and here’s what makes it special
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the loss of lives in an accident in Sambhal, Uttar Pradesh
July 05, 2025
QuotePM announces ex-gratia from PMNRF

Prime Minister Shri Narendra Modi today condoled the loss of lives in an accident in Sambhal, Uttar Pradesh. He announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased and Rs. 50,000 to the injured.

The PMO India handle in post on X said:

“Deeply saddened by the loss of lives in an accident in Sambhal, Uttar Pradesh. Condolences to those who have lost their loved ones in the mishap. May the injured recover soon.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi”