பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் அவர்களே, முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர்லால் அவர்களே, சி ஆர் பாட்டீல் அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்துள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே!
கடந்த 2 நாட்களாக குஜராத்தில் இருக்கிறேன். நேற்று நான் வதோதரா, தாஹோத், புஜ், அகமாதாபாத் ஆகிய இடங்களுக்கு சென்றிருந்தேன். இன்று காலை காந்திநகருக்கு வந்துள்ளேன். நான் எங்கு சென்றாலும் நெற்றித்திலகங்கள் கடலின் ஆர்ப்பரிப்பு போல தேசபக்தியை காட்டுவதாக உள்ளது. நெற்றித்திலகங்கள் கடலின் ஆர்ப்பரிப்பும், மூவண்ணக்கொடிகளின் அலைகளும், மக்களின் இதயங்களின் தாய்நாட்டுக்கான அன்பு நிரம்பியுள்ளதை காட்டுகின்றன. இத்தகைய காட்சி குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. ஒவ்வொரு இந்தியர் மனதிலும் இது இருக்கிறது. உடல் எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் ஒரு முள் குத்தினாலும் உடல் முழுவதும் வலிக்கிறது. இப்போது அந்த முள்ளை அகற்றுவதென நாம் முடிவு செய்துள்ளோம்.

நண்பர்களே,
யாரோடும் நான் பகைமையை விரும்பவில்லை. நாம் மகிழ்ச்சியோடும், அமைதியாகவும் வாழ விரும்புகிறோம். நாம் வளர்ச்சியை விரும்புவதால் உலகத்தின் நல்வாழ்வுக்கும், நாம் பங்களிப்பு செய்ய முடியும். இதனால் தான் கோடிக்கணக்கான இந்தியர்களின் நல்வாழ்வுக்கு ஒருமித்த மனதோடு பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்.
என்னை வளர்த்து ஆளாக்கிய குஜராத் மாநிலத்திற்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இங்கு நான் பெற்ற கல்வி, உங்களிடையே தங்கியிருந்து நான் கொண்ட அனுபவம், நீங்கள் எனக்கு அளித்த மந்திரங்கள், என்னுள் நீங்கள் விதைத்த கனவுகள் ஆகியவற்றை பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நான் முயற்சி செய்துவருகிறேன். 2005-ம் ஆண்டு நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டு என அறிவித்ததையொட்டி இப்போது அதன் 20-வது ஆண்டு விழாவுக்கு குஜராத் அரசு ஏற்பாடு செய்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நண்பர்களே,
உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக இன்று நாம் மாறியிருக்கிறோம். ஜப்பானை விஞ்சியிருக்கிறோம் என்பதில் திருப்தி அடைந்துவிட முடியுமா, மேலும் முன்னேறுகிறோம். நான்கு என்பதை விட மூன்று என மாறுவது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு 2047 என்ற எங்களின் இலக்கில் சமரசம் ஏதுமில்லை. 140 கோடி இந்திய மக்கள் இந்தியாவை வளர்ச்சியடைந்ததாக மாற்றுவார்கள்.
நண்பர்களே,
குஜராத்தில் என்ன இருக்கிறது? கடல் இருக்கிறது, உப்பு மணல் இருக்கிறது. பாலைவனம் இருக்கிறது. மற்றொரு பக்கத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. இது என்ன செய்ய முடியும்? குஜராத்தில் கனிம வளங்கள் இல்லை, குஜராத் எவ்வாறு முன்னேறும்? அனைவரும் வர்த்தகர்கள். அவர்கள் பொருட்களை இங்கே வாங்கி, அங்கே விற்பார்கள். இதற்கிடையே தரகின் வழியாக வாழ்வாதாரத்திற்கு வருவாய் ஈட்டுவார்கள். ஒரு காலத்தில் குஜராத்தில் உப்பை தவிர வேறு எதுவுமில்லை. இன்று குஜராத் வைரங்களுக்காக அறியப்படுகிறது. இந்தப் பயணத்தை நாம் நடத்தியிருக்கிறோம். திட்டமிட்ட முறையில் இது செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

2005-ம் ஆண்டு நகர்ப்புற வளர்ச்சி ஆண்டு என கருதப்பட்டது போல் ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கான கல்வி, சுற்றுலா போன்றவற்றுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தத்துறை சார்ந்த பணிகள் மட்டுமின்றி மற்றத்துறைகளின் பணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வளர்ச்சிக்கு வழிவகுக்கப்பட்டது. ராம் உத்சவ் இப்படித்தான் வந்தது. இதன் மூலம் தான் ஒற்றுமையின் சிலை உருவானது.
நண்பர்களே,
தற்போது சோமநாதர் ஆலயம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அம்பாஜி ஆலயம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சாகச விளையாட்டுகள் வந்துள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக வளர்ச்சியின் விஷயங்கள் தொடங்கின. இது நிர்வாக மாதிரியாகும். துரதிர்ஷ்டவசமாக சித்தாந்த எதிர்ப்பு காரணமாக வளர்ச்சி நடைமுறைகளை நிராகரிப்பது, அவர்களின் குணமாக மாறிவிட்டது. ஒரு நபரைச் சார்ந்த விருப்பு, வெறுப்புகளால் அவரது செயலும் மதிப்பிடப்படுவதால் நல்ல செயல்கள் கூட ஏற்கபடாமல் எதிர்க்கப்படுகின்றன.

நண்பர்களே,
என் மனதில் ஒருபோதும் விரக்தி போன்ற எதுவும் ஏற்படுவதில்லை. நான் எப்போதும் நம்பிக்கைவாதியாக இருக்கிறேன். தடைகளுக்கு அப்பால் என் பார்வையை செலுத்துகிறேன். எனது நாட்டின் சக்தியை நான் உணர்கிறேன். எனது நாட்டு மக்களின் சக்தியை நான் பார்க்கிறேன். இந்த சக்தியின் மூலம் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும். இதனால் இந்த இடத்திற்கு என்னை கொண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்கிய குஜராத் அரசுக்கு நான் மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன்.

2047-ல் இந்தியா தனது சுதந்திரத்தின் 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் போது அதன் பொருளாதாரத்தை நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு உயர்த்துவோம். எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டுப் பொருட்களை விற்க மாட்டோம் என ஒவ்வொரு கிராமத்தின் வணிகர்களும் சபதம் ஏற்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் வெளிநாட்டுப் பொருட்கள் பற்றி நினைத்துப்பாருங்கள். அவற்றை ஒதுக்கி உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளித்தால் ஒரு மாவட்டம், ஒரு உற்பத்தி பொருள் என்பதை செயல்படுத்தினால் நமது நாடு வலுவடையும். 2047-க்கு முன்பு வளர்ச்சியடைந்த இந்தியாவை நாம் உருவாக்குவதை நீங்கள் காணலாம். இந்த எதிர்பார்ப்புடன் உங்கள் முழு ஆற்றலையும் பயன்படுத்தி முழக்கமிடுங்கள்.

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

நன்றி!