மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, சாந்தனு தாக்கூர் அவர்களே, ரவ்னீத் சிங் அவர்களே, சுகந்த மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவான ஷோமிக் பட்டாச்சார்யா அவர்களே, இங்கு கூடியிருக்கும் இதர மக்கள் பிரதிநிதிகளே, பெரியோர்களே, தாய்மார்களே,
மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த இன்று மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நோபராவிலிருந்து ஜெய்ஹிந்த் பிமான் பந்தர் வரையிலான கொல்கத்தா மெட்ரோவில் பயணம் செய்துவிட்டு இப்போதுதான் நான் திரும்பியுள்ளேன். இந்த நேரத்தில், நிறைய நண்பர்களுடன் பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கொல்கத்தாவின் பொது போக்குவரத்து இப்போது மிகவும் நவீனமாகி வருவதில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். இன்று, ஆறு வழி உயர்மட்ட கோனா விரைவுச்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அனைத்து திட்டங்களுக்காக கொல்கத்தா மக்களுக்கும், மேற்கு வங்க மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நண்பர்களே,
கொல்கத்தா போன்ற நகரங்கள் இந்தியாவின் வரலாறு, நமது எதிர்காலம் என இரண்டிற்கும் ஒரு வளமான அடையாளமாகும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா இன்று முன்னேறும் நிலையில், கொல்கத்தா, டம் டம் போன்ற இந்த நகரங்களின் பங்கு மிகப் பெரியது. எனவே, இன்றைய திட்டத்தின் செய்தி மெட்ரோ தொடக்க விழா மற்றும் நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டுவதை விட பெரியது. இந்த நிகழ்வு இன்றைய இந்தியா தனது நகரங்களை எவ்வாறு மாற்றுகிறது என்பதற்கு ஒரு சான்றாகும். இன்று, இந்திய நகரங்களில் பசுமை இயக்கத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின்சார சார்ஜிங் நிலையங்கள் மற்றும் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கழிவுகளை செல்வமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நகரத்தில் உருவாகும் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது , மெட்ரோ வசதிகள் அதிகரித்து வருகின்றன, மெட்ரோ ரயில் கட்டமைப்பு விரிவடைந்து வருகிறது. இன்று உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ வலையமைப்பு இந்தியாவில் இருப்பதைக் கேட்டு அனைவரும் பெருமைப்படுகிறார்கள். 2014-க்கு முன், நாட்டில் மெட்ரோ பாதை 250 கிலோமீட்டர் மட்டுமே இருந்தது. இன்று நாட்டில் மெட்ரோ பாதை ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாகிவிட்டது. கொல்கத்தாவிலும் மெட்ரோ தொடர்ந்து விரிவடைந்துள்ளது. இன்றும் கூட, கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டமைப்பில் சுமார் 14 கிலோமீட்டர் புதிய பாதைகளும் 7 புதிய நிலையங்களும் சேர்க்கப்படுகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் கொல்கத்தா மக்களின் வாழ்க்கை வசதியையும் பயண வசதியையும் மேம்படுத்தும்.
மேற்கு வங்க வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இன்று, 100% ரயில்வே மின்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் மேற்கு வங்கமும் இணைந்துள்ளது. நீண்ட காலமாக, புருலியா - ஹவுரா இடையே ஒரு மெமு ரயில் வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. பொதுமக்களின் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இன்று, மேற்கு வங்கத்தின் பல்வேறு வழித்தடங்களில் 9 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன, இது தவிர, உங்கள் அனைவருக்கும் 2 அம்ரித் பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இன்னும் சற்று நேரத்தில், அருகில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது, அந்தக் கூட்டத்தில், மேற்கு வங்கத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் குறித்து உங்கள் அனைவருடனும் விரிவான கலந்துரையாடல் இருக்கும். மேலும் நிறைய நிகழ்வுகள் இருக்கும். அதனால் அங்கே பலர் காத்திருக்கிறார்கள், நான் என் உரையை இங்கே நிறைவுசெய்கிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! நன்றி!