Quote3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
Quoteஆறு புதிய ரயில் நிலைய கட்டிடங்களுடன் சனத்நகர் – மௌலா அலி இரட்டை ரயில்பாதை, மின்மயமாக்கல் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்
Quoteகாட்கேசர் - லிங்கம்பள்ளியில் இருந்து மௌலா அலி - சனத்நகர் வழியாக பன்னோக்குப் போக்குவரத்து ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்
Quoteஇந்தியன் ஆயில் பாரதீப்-ஹைதராபாத் உற்பத்திப் பொருட்கள் குழாய் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்
Quoteஹைதராபாத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பு மையத்தை அவர் தொடங்கி வைத்தார்
Quote"மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற மந்திரத்தை நான் நம்புகிறேன்"
Quote"இன்றைய திட்டங்கள் வளர்ச்சியடைந்த தெலங்கானா மூலம் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய உதவும்"
Quoteஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பு மையம், நவீன தரத்தின் அடிப்படையில் அமையும் முதல் மையமாகும்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா ஜி.கிஷன் ரெட்டி அவர்களே, தெலங்கானா அரசின் அமைச்சர்களே, கொண்டா சுரேகா அவர்களே, கே.வெங்கட் ரெட்டி அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவான டாக்டர் கே.லக்ஷ்மன் அவர்களே மற்றும் மதிப்புமிக்க பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

 

|

சங்கரெட்டி மக்களுக்கு வாழ்த்துக்கள்!

தெலுங்கானாவை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தெலங்கானாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நான் உங்களிடையே இருக்கிறேன். நேற்று, அடிலாபாத்தில் இருந்து தெலங்கானா மற்றும் நாட்டிற்கு சுமார் 56,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நான் தொடங்கி வைத்தேன். இன்று, சங்காரெட்டியில் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டங்களில் நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலையங்கள் தொடர்பான நவீன உள்கட்டமைப்பு அடங்கும். பெட்ரோலியம் தொடர்பான திட்டங்களும் உள்ளன. நேற்று தெலுங்கானாவில் பயனடைந்த வளர்ச்சிப் பணிகள் எரிசக்தி, சுற்றுச்சூழல் முதல் உள்கட்டமைப்பு வரை பல்வேறு துறைகளுடன் தொடர்புடையவை. மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற கொள்கையில் நான் உறுதியாக நம்புகிறேன். இதுதான் எங்கள் வேலைக்கான வழி, இந்த உறுதியுடன், மத்திய அரசு தெலங்கானாவுக்கும் சேவை செய்கிறது. இன்று இந்தச் சந்தர்ப்பத்தில், இந்த வளர்ச்சிப் பணிகளுக்காக உங்கள் அனைவரையும், தெலங்கானா மக்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

இன்று, தெலுங்கானாவுக்கு விமானப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க பரிசு கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் 'கேரோ' என்று அழைக்கப்படும் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. நவீனத் தரத்தில் கட்டப்பட்ட நாட்டின் முதல் விமானப் போக்குவரத்து மையம் இதுவாகும். இந்த மையம் ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவுக்கு புதிய அடையாளத்தை வழங்கும். இது தெலங்கானா இளைஞர்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய எல்லைகளைத் திறக்கும். இது நாட்டில் விமானப் போக்குவரத்துத் தொழில் தொடங்குபவர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான   வலுவான அடித்தளத்தை வழங்கும். இன்று இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை புதிய சாதனைகளைப் படைத்து வரும் விதம், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ள விதம், இந்தத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வரும் விதம், ஹைதராபாத்தில் உள்ள இந்த நவீன நிறுவனம் இந்த வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் மகத்தான பங்கை வகிக்கும்.

 

|

நண்பர்களே,

இன்று, 1.4 பில்லியன் குடிமக்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க உறுதிபூண்டுள்ளனர். நவீன உள்கட்டமைப்பு வளர்ந்த பாரதத்துக்கு அவசியம். அதனால்தான் இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். இதன் மூலம் தெலங்கானா அதிகப் பயனடைவதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி. இன்று, இந்தூர்-ஹைதராபாத் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கம் நிறைவடைந்து, கண்டி-ராம்சன்பள்ளி பிரிவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தெலங்கானா மற்றும் ஆந்திரா இடையேயான பயணத்தை எளிதாக்கும் வகையில் மிர்யாலகுடா கோடாட் பிரிவும் நிறைவடைந்துள்ளது. இது சிமெண்ட் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் பயனளிக்கும். இன்று, சங்காரெட்டியை மடினகுடாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது நிறைவடையும் போது, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையேயான தொடர்பை மேம்படுத்தும். 1300 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம், ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும்.

நண்பர்களே,

தெலங்கானா தென்னிந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. தெலங்கானாவில் ரயில் சேவைகளை மேம்படுத்த மின்மயமாக்கல் மற்றும் ரயில் வசதிகளை இரட்டிப்பாக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. செகந்திராபாத்-மௌலா அலி வழித்தடத்தில், இரட்டை ரயில்பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் ஆறு புதிய நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்று, காட்கேசர் மற்றும் லிங்கம்பள்ளி இடையேயான எம்எம்டிஎஸ் ரயில் சேவையும் இங்கிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கத்துடன், ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தின் மேலும் பல பகுதிகள் இப்போது இணைக்கப்படும். இது இரு நகரங்களுக்கு இடையே பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும்.

 

|

நண்பர்களே,

இன்று, பாரதீப்-ஹைதராபாத் குழாய் பதிக்கும் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பையும் நான் பெற்றுள்ளேன். இந்தத் திட்டம் பெட்ரோலியப் பொருட்களை செலவு குறைந்த மற்றும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதற்கான வசதியை வழங்கும். இது நீடித்த வளர்ச்சிக்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும். எதிர்காலத்தில், 'வளர்ச்சியடைந்த தெலங்கானா' பிரச்சாரத்தை 'வளர்ச்சியடைந்த பாரதமாக'  மாற்ற மேலும் துரிதப்படுத்துவோம்.

நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

 

|
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Manufacturing push in India: Samsung expands production portfolio; 'driven by talent and innovation' says

Media Coverage

Manufacturing push in India: Samsung expands production portfolio; 'driven by talent and innovation' says
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM reaffirms Government’s commitment to Infrastructure Boost in NCR to enhance Ease of Living
August 16, 2025

Prime Minister Shri Narendra Modi today reaffirmed the Government’s unwavering commitment to improving the ‘Ease of Living’ for citizens through a significant boost to infrastructure development in the National Capital Region (NCR).

Responding to a post by DDNews on X, Shri Modi wrote:

“A boost to infrastructure in NCR, in line with our commitment to improve ‘Ease of Living.’”