'வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்' என்ற தாரக மந்திரத்துடன் புதிய இந்தியா முன்னேறி வருகிறது: பிரதமர்
நமது நாடு ஞானிகள், அறிஞர்கள், துறவிகள் நிறைந்த பூமி, நமது சமூகம் ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்லும்போதெல்லாம், யாராவது ஒரு துறவி அல்லது ஞானி இந்த மண்ணில் தோன்றி சமூகத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறார்: பிரதமர்
ஏழைகளையும், வஞ்சிக்கப்பட்டவர்களையும் மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடு, 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற மந்திரம், சேவை உணர்வு ஆகியவை அரசின் கொள்கையும், உறுதிப்பாடும் ஆகும்: பிரதமர்
இந்தியா போன்ற ஒரு நாட்டில், நமது கலாச்சாரம் நமது அடையாளத்துடன் இணைக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, நமது கலாச்சாரம் நமது திறனையும் வலுப்படுத்துகிறது: பிரதமர்

ஜெய் சச்சிதானந்த ஜி!!

சுவாமி விச்சார் பூர்ண ஆனந்த்ஜி மகராஜ் அவர்களே, ஆளுநர் மங்குபாய் படேல் அவர்களே, முதலமைச்சர் மோகன் யாதவ் அவர்களே, எனது அமைச்சரவை சகாவான ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் வி.டி.சர்மா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் அவர்களே, மேடையில் குழுமியிருக்கும் இதர பிரமுகர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே, தில்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்துள்ளனர். உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

 

நண்பர்களே,

இன்று ஸ்ரீ அனந்த்பூர் தாமிற்கு வந்திருப்பதால் என் இதயம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளது. இப்போதுதான் குருஜி மகராஜ் கோவிலில் தரிசனம் செய்தேன். மெய்யாகவே, என் இருதயம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கிறது.

 

நண்பர்களே,

எந்த நிலத்தில் ஒவ்வொரு துகளும் துறவிகளின் தவத்தால் நீர் பாய்ச்சப்படுகிறதோ, எங்கே தானம் ஒரு பாரம்பரியமாக மாறியிருக்கிறதோ, எங்கே சேவை மனவுறுதி மனித குலத்தின் நலனுக்கு வழி வகுக்குவோ, அந்த நிலம் சாதாரணமானது அல்ல. அதனால்தான் அசோக நாகரைப் பற்றி நம் துறவிகள் சொன்னார்கள்,  இன்று இங்கு பைசாகி மற்றும் ஸ்ரீ குரு மகராஜ் ஜியின் அவதார தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். 1936ஆம் ஆண்டு இதே நாளன்று திரு. துவிதிய பாதுஷாஹி அவர்களுக்கு மகாசமாதி அளிக்கப்பட்டது என்பதை நான் அறிகிறேன். 1964-ம் ஆண்டு இதே நாளில், ஸ்ரீ திரிதியை பாதுஷாஹி அவர்கள் முக்தி அடைந்தார். இந்த இருவருக்கும் என் வணக்கத்தை செலுத்துகிறேன்.

 

நமது பாரதம் ஞானிகள், துறவிகள் நிறைந்த பூமி. நமது பாரதத்தில், நமது சமுதாயம் இக்கட்டத்தை கடந்து வரும்போதெல்லாம், யாராவது ஒரு ஞானி அல்லது ஆன்மீகவாதி இந்த பூமியில் இறங்கி, சமுதாயத்திற்கு ஒரு புதிய திசையை அளிக்கிறார். ஆதி சங்கராச்சாரியார் போன்ற ஆச்சார்யர்கள் அத்வைத தத்துவத்தின் ஆழமான அறிவை விளக்கிய காலம் ஒன்று இருந்தது. அடிமைத்தன காலத்தில் சமூகம் அந்த அறிவை மறக்கத் தொடங்கியது. இந்த பாரம்பரியத்தில், பூஜ்ய அத்வைத ஆனந்த் ஜி மகராஜ் இதை இந்தியாவின் சாதாரண மக்களுக்கும் பரப்ப முன்முயற்சி எடுத்தார். மகராஜ் ஜி அத்வைத ஞானத்தை நம் அனைவருக்கும் எளிமையாக்கினார், சாதாரண மனிதனுக்கும் அதை கிடைக்கச் செய்தார்.

 

நண்பர்களே,

இன்று, உலகின் பொருள் முன்னேற்றத்திற்கு மத்தியில், போர், மோதல் மற்றும் மனிதகுலத்திற்கான மனித மதிப்புகள் தொடர்பான பல பெரிய கவலைகளையும் நாம் எதிர்கொள்கிறோம். இந்த கவலைகள், இந்த சவால்களின் வேர் என்ன? இவற்றின் வேராக இருப்பது தன்னையும் பிறரையும் பற்றிய மனநிலை! மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கும் மனநிலை. இன்று உலகமும் யோசிக்கிறது, அவை எங்கே தீர்க்கப்படும்? அத்வைதம் (இருமையின்மை) என்ற கருத்தில் அவற்றுக்கான தீர்வு காணப்படும்! அத்வைதம் என்றால் இருமை இல்லாத இடத்தில் என்று பொருள். அத்வைதம் என்றால் ஒவ்வொரு உயிரினத்திலும் ஒரே ஒரு கடவுளைக் காண்பது என்று பொருள்! இன்னும் சொல்லப்போனால் படைப்பு முழுவதையும் இறைவனின் வடிவமாகக் காணும் கருத்து அத்வைதம். பரமஹம்ஸ் தயாள் மகராஜ் இந்த அத்வைத தத்துவத்தை எளிய வார்த்தைகளில் கூறுவார். இந்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டால், அனைத்து மோதல்களும் முடிவுக்கு வரும்.

 

நண்பர்களே,

சிறிது நேரத்திற்கு முன்பு, நான் ஆறாவது பாதுஷாஹி சுவாமி ஸ்ரீ விசார் பூர்ண ஆனந்த் ஜி மகராஜுடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். முதல் பாதுஷாஹி பரமஹம்சன்ஸ் தயாள் மகராஜ் அவர்களின் சிந்தனைகளோடு ஆனந்த்தாமின் சேவை நடவடிக்கைகள் குறித்தும் அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். நமது கலாச்சாரத்தின் அடிப்படை. ஆனந்த்பூர் அறக்கட்டளை இந்தச் சேவை கலாச்சாரத்தை முழு அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச் செல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அறக்கட்டளை நடத்தும் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக இலவச முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பசு சேவைக்காக நவீன கௌசாலை ஒன்றும் நடத்தப்படுகிறது. புதிய தலைமுறையினரின் வளர்ச்சிக்காக பல பள்ளிகளை இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது. இது மட்டுமல்ல, அனந்த்பூர் அணை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாயிலாக ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் மகத்தான சேவையை செய்து வருகிறது. ஆசிரமத்தின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலத்தை பசுமையாக்கியுள்ளதாக என்னிடம் கூறப்பட்டது. இன்று இந்த ஆசிரமத்தில் நடப்பட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் தானமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

சகோதர சகோதரிகளே,

இந்தச் சேவை உணர்வுதான் இன்று நமது அரசின் ஒவ்வொரு முயற்சியிலும் மையமாக உள்ளது. கரிப் கல்யாண் அன்ன  திட்டத்தால் இன்று ஒவ்வொரு ஏழை எளியவரும் உணவுக் கவலையிலிருந்து விடுபட்டுள்ளனர். இன்று ஒவ்வொரு ஏழை மற்றும் முதியவரும் ஆயுஷ்மான் திட்டத்தின் காரணமாக சிகிச்சை பற்றிய கவலையிலிருந்து விடுபட்டுள்ளனர். இன்று பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் காரணமாக ஒவ்வொரு ஏழையும் கான்கிரீட் வீடு பற்றிய கவலையிலிருந்து விடுபட்டுள்ளார். ஜல் ஜீவன் மிஷன் திட்டம் காரணமாக இன்று ஒவ்வொரு கிராமத்திலும் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது. நாட்டில் சாதனை எண்ணிக்கையில் புதிய எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம்கள் திறக்கப்பட்டு வருகின்றன. பரம ஏழைகளின் குழந்தைகளின் கனவுகள் நனவாகி வருகின்றன. நமது சுற்றுச்சூழல் சுத்தமாகவும், இயற்கையை பாதுகாக்கவும் உறுதி செய்வதற்காக, தாயின் பெயரில் ஒருமரம்  என்ற பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது. இன்று, இந்த இயக்கத்தின் கீழ், நாட்டில் கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளன. மிகப் பெரிய அளவில் நாடு இவ்வளவு விஷயங்களைச் செய்ய முடிகிறது என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் சேவை மனப்பான்மை தான் அதற்குக் காரணம். ஏழைகள் மற்றும் வஞ்சிக்கப்பட்டவர்களை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடு, "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்ற மந்திரம், இந்த சேவை உணர்வு, இன்று அரசின் கொள்கை மற்றும் அர்ப்பணிப்பு ஆகும் .

 

நண்பர்களே,

சேவை செய்வதற்கான தீர்மானத்துடன் நாம் ஒன்றிணையும்போது, நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறோம் என்று மட்டும் இல்லை. சேவை மனப்பான்மை நமது ஆளுமையை மேம்படுத்துகிறது, நமது சிந்தனையை விரிவானதாக ஆக்குகிறது. சேவை நம்மை நமது தனிப்பட்ட வட்டத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று சமூகம், தேசம் மற்றும் மனிதகுலத்தின் பரந்த நோக்கங்களுடன் நம்மை இணைக்கிறது. சேவைக்காக ஒன்றிணைந்து செயல்படவும், ஒற்றுமையாக செயல்படவும் கற்றுக்கொள்கிறோம். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நீங்கள் அனைவரும் சேவைப் பணியில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களுடன் போராடி பின்னர் அவற்றை வெல்வதை அனுபவித்திருப்பீர்கள், சேவை செய்யும் போது இவை அனைத்தையும் நாங்கள் எளிதாகக் கற்றுக்கொள்கிறோம். அதனால்தான் நான் சொல்கிறேன், சேவை என்பது சாதனை, ஒவ்வொரு மனிதனும் நீராட வேண்டிய கங்கை அது.

 

நண்பர்களே,

சேவை செய்வதற்கான தீர்மானத்துடன் நாம் ஒன்றிணையும்போது, நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறோம் என்று மட்டும் இல்லை. சேவை மனப்பான்மை நமது ஆளுமையை மேம்படுத்துகிறது, நமது சிந்தனையை விரிவானதாக ஆக்குகிறது. சேவை நம்மை நமது தனிப்பட்ட வட்டத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று சமூகம், தேசம் மற்றும் மனிதகுலத்தின் பரந்த நோக்கங்களுடன் நம்மை இணைக்கிறது. சேவைக்காக ஒன்றிணைந்து செயல்படவும், ஒற்றுமையாக செயல்படவும் கற்றுக்கொள்கிறோம். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நீங்கள் அனைவரும் சேவைப் பணியில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களுடன் போராடி பின்னர் அவற்றை வெல்வதை அனுபவித்திருப்பீர்கள், சேவை செய்யும் போது இவை அனைத்தையும் நாங்கள் எளிதாகக் கற்றுக்கொள்கிறோம். அதனால்தான் நான் சொல்கிறேன், சேவை என்பது சாதனை, ஒவ்வொரு மனிதனும் நீராட வேண்டிய கங்கை அது.

 

2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவாக மாற வேண்டும் என்று இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நாங்கள் நிச்சயமாக அடைவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஆனால் இந்தப் பயணத்தில், நாம் எப்போதும் சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். உலகின் பல நாடுகள் வளர்ச்சிப் பயணத்தில் தங்கள் கலாச்சாரத்திலிருந்து துண்டிக்கப்பட்டு, தங்கள் பாரம்பரியங்களை மறந்ததை நாம் காண்கிறோம். இந்தியாவில் நமது தொன்மையான கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். இந்தியா போன்ற ஒரு நாட்டில், நமது கலாச்சாரம் நமது அடையாளத்துடன் மட்டும் இணைக்கப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது கலாசாரம்தான் நமது வலிமையை வலுப்படுத்துகிறது. அனந்த்பூர் தாம் அறக்கட்டளை இந்தத் திசையில் பல பணிகளைச் செய்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அனந்த்பூர் தாமின் சேவைப் பணிகள் வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை புதிய சக்தியுடன் முன்னெடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன். பைசாகி மற்றும் ஸ்ரீ குரு மகராஜ் ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க வாழ்த்துக்கள். ஜெய் ஸ்ரீ சச்சிதானந்தா.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Unemployment rate falls to 4.7% in November, lowest since April: Govt

Media Coverage

Unemployment rate falls to 4.7% in November, lowest since April: Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting humility and selfless courage of warriors
December 16, 2025

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam-

“न मर्षयन्ति चात्मानं
सम्भावयितुमात्मना।

अदर्शयित्वा शूरास्तु
कर्म कुर्वन्ति दुष्करम्।”

The Sanskrit Subhashitam reflects that true warriors do not find it appropriate to praise themselves, and without any display through words, continue to accomplish difficult and challenging deeds.

The Prime Minister wrote on X;

“न मर्षयन्ति चात्मानं
सम्भावयितुमात्मना।

अदर्शयित्वा शूरास्तु
कर्म कुर्वन्ति दुष्करम्।।”