“குஜராத் ஆசிரியர்களுடனான எனது அனுபவம் தேசிய அளவிலும், கொள்கைக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் எனக்கு உதவியது”
“உலகத் தலைவர்கள் பலர் தங்களின் இந்திய ஆசிரியர்களை உயர்வாக மதிக்கிறார்கள்”
“நிலைபேறுள்ள மாணவனாக இருக்கும் நான் சமூகத்தில் நடக்கும் எதையும் துல்லியமாக கவனிப்பதற்கு கற்றுக் கொண்டுள்ளேன்”
“பாரம்பரிய முறையிலான கற்பித்தலிலிருந்து ஆசிரியர்கள் விடுபட நம்பிக்கையுள்ள அச்சமற்ற இக்கால மாணவர்கள் சவால் விடுக்கின்றனர்”
“கற்றல், கல்லாமை, மறுபடியும் கற்றல் என்பதற்கு அவர்கள் நமக்கு வாய்ப்பளிப்பதால் தனிப்பட்ட முறையிலும், தொழில் முறை ரீதியாகவும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக கருதி ஆர்வமுள்ள மாணவர்களிடமிருந்து வரும் சவால்களை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்”
“தொழில்நுட்பம் தகவலை தர முடியும்; ஆனால் கண்ணோட்டத்தை தர இயலாது”
“21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப புதிய நடைமுறைகளை இந்தியா உருவாக்கி வருகிறது, இதனைக் கருத்தில் கொண்டு புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது”
“மாநில மொழிகளில் கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இது ஆசிரியர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும்”
‘மாற்றத்தை ஏற்படுத்தும் கல்வியின் இதயமாக ஆசிரியர்கள்’ என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாகும்.
இதனால் அவர்கள் மீது தங்களின் முழு நம்பிக்கையை வைக்கிறார்கள் என்றும் பிரதமர் கூறினார்.

குஜராத் முதல்வர் திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு பர்ஷோத்தம் ரூபாலா, திரு சி.ஆர்.பாட்டில் அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, அகில பாரதிய சிக்ஷா சங் உறுப்பினர்களே, தாய்மார்களே, அன்பர்களே! 

விடுதலையின் அமிர்த காலத்தில் வளர்ந்த நாடாக முன்னேறும் உறுதிப்பாட்டுடன் இந்தியா முன்னேறி வரும் வேளையில், ஆசிரியர்களின் பங்களிப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. திரு ரூபாலா அவர்கள் கூறியதைப் போல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லாத காரணத்தால் ஏராளமான மாணவிகள் பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலை இருந்தது. அதனால் பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிவறைகளை கட்டமைக்கும் சிறப்பு திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். அதேபோல, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒரு காலத்தில் அறிவியல் பிரிவு வழங்கப்படவில்லை. இன்று, ஆசிரியர்கள் அறிவியலை கற்றுத் தருவது மட்டுமல்லாமல், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும் பணியாற்றுகிறார்கள். இந்திய ஆசிரியர்கள் உலகம் முழுவதும் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

 

வேகமாக மாறிவரும் இந்த 21-வது நூற்றாண்டில் இந்திய கல்வி முறையுடன், ஆசிரியர்களும், மாணவர்களும் மாற்றத்தை சந்திக்கிறார்கள். போதுமான உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் குறைவு போன்ற சவால்களை முன்னர் ஆசிரியர்கள் எதிர்கொண்டு வந்தனர். ஆனால் இன்று இதுபோன்ற பிரச்சனைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. இருந்த போதும் இன்றைய தலைமுறை குழந்தைகளிடையே உள்ள ஆர்வம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வது அவசியமாகிறது.

 

தகவல்கள் பெருமளவு கொட்டிக் கிடக்கும் போது, மாணவர்கள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். எனவே 21-வது நூற்றாண்டில், மாணவர்களின் வாழ்வில் ஆசிரியரின் பங்களிப்பு அதி முக்கியத்துவம் பெறுகிறது. தொழில்நுட்பத்தால் தகவல்களை வழங்கக்கூடும் என்ற போதும், சரியான அணுகுமுறையை ஆசிரியரால் மட்டுமே அளிக்க முடியும். ஆசிரியர்களுக்கு நமது பாரம்பரியம் அளித்துள்ள மரியாதை, பெருமையை முன்னெடுத்துச் சென்று, புதிய இந்தியாவின் கனவை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வணக்கம்!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games

Media Coverage

Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 4, 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership