India and the UK have successfully finalised the Free Trade Agreement: PM
India is becoming a vibrant hub of trade and commerce: PM
Nation First - Over the past decade, India has consistently followed this very policy: PM
Today, when one sees India, then they can be rest assured that Democracy can deliver: PM
India is moving from GDP- centric approach towards Gross Empowerment of People (GEP) - centric progress: PM
India is showing the world how tradition and technology can thrive together: PM
Self-reliance has always been a part of our economic DNA: PM

வணக்கம்,

இன்று காலை முதல், பாரத் மண்டபம் ஒரு துடிப்பான தளமாக மாறியுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு, உங்கள் குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த உச்சிமாநாடு பன்முகத்தன்மையால் நிறைந்துள்ளது. பல பிரமுகர்கள் இந்த உச்சிமாநாட்டை கவனம் மிக்கதாக ஆக்கியுள்ளனர். உங்கள் அனுபவமும் மிகவும் செறிவாகியிருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த உச்சிமாநாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பெருமளவிலான பங்கேற்பு, ஒரு வகையில், அதன் தனித்துவமான அம்சமாக மாறியுள்ளது. குறிப்பாக, எங்கள் ட்ரோன் சகோதரிகள் மற்றும் லட்சாதிபதி சகோதரிகள் அனைவரையும் நான் இப்போது சந்தித்தபோது, அவர்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்ட உற்சாகத்தைக் காண முடிந்தது. அவர்களின் ஒவ்வொரு உரையாடலையும் அவர்கள் நினைவில் வைத்திருந்தனர். இது உண்மையிலேயே ஒரு ஊக்கமளிக்கும் சந்தர்ப்பமாக இருந்து வருகிறது.

நண்பர்களே,

இன்று பாரதத்திற்கு ஒரு வரலாற்று நாள். சிறிது நேரத்திற்கு முன்பு, இங்கு வருவதற்கு முன்பு, நான் இங்கிலாந்து பிரதமருடன் உரையாடினேன். இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகின் இரண்டு பெரிய மற்றும் வெளிப்படையான சந்தைப் பொருளாதாரங்களுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்க்கும். இது, குறிப்பாக நமது இளைஞர்களுக்கு, ஒரு சிறந்த செய்தி ஆகும். இது பாரதத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தை அளிக்கும். மேலும் இந்திய வணிகங்கள் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். உங்களுக்குத் தெரியும், சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகளுடனும் நாம் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்.

நண்பர்களே,

கடந்த 10–11 ஆண்டுகளில், எங்கள் அரசு ஒன்றன்பின் ஒன்றாக முடிவுகளை எடுத்துள்ளது. அவை பல ஆண்டுகளாக தேக்கமடைந்து, தாமதமாகி, அல்லது தடம் புரண்ட, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முடிவுகள். உதாரணமாக, நமது வங்கித் துறையை எடுத்துக் கொள்ளுங்கள், இது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். முன்னதாக, வங்கிகளின் இழப்புகளைப் பற்றி விவாதிக்காமல் எந்த உச்சிமாநாடும் முழுமையடையாது. மேலும் நமது நாட்டில் உள்ள வங்கிகள் 2014 க்கு முன்பு முழுமையான சரிவின் விளிம்பில் இருந்தன. ஆனால் இன்றைய நிலைமை என்ன? தற்போது, இந்தியாவின் வங்கித் துறை உலகின் வலிமையான அமைப்புகளில் ஒன்றாகும். நமது வங்கிகள் சாதனை லாபத்தை ஈட்டி வருகின்றன. மேலும் வைப்புத்தொகையாளர்கள் அதன் பலன்களைப் பெறுகிறார்கள். நமது அரசு வங்கித் துறையில் தொடர்ந்து சீர்திருத்தங்களைச் செய்ததால் இது சாத்தியமானது. ஏர் இந்தியாவின் முந்தைய நிலையும் உங்கள் நினைவில் இருக்கும். ஏர் இந்தியா மூழ்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இருப்பினும், முந்தைய அரசுகள் ஒரு முடிவை எடுக்க பயந்தன. நாங்கள் அந்த முடிவை எடுத்து நாட்டைத் தொடர்ச்சியான இழப்புகளிலிருந்து காப்பாற்றினோம். ஏனென்றால், நாட்டின் நலன் நமக்கு முதலில் வருகிறது.

நண்பர்களே,

நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவர், அரசு ஏழைகளுக்கு ஒரு ரூபாய் அனுப்பும்போது, 85 பைசா வழியில் இழக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டார். அரசுகள் மாறின. ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் ஏழைகளுக்குச் செலுத்த வேண்டிய முழுத் தொகையும் உண்மையில் அவர்களைச் சென்றடைவதற்கு எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தில்லியில் இருந்து ஒரு ரூபாய் அனுப்பப்பட்டால், 100 பைசாவும் பயனாளியைச் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. இதற்காக, நேரடிப் பலன் பரிமாற்ற முறையை நாங்கள் செயல்படுத்தினோம். இது அரசுத் திட்டங்களின் பலன்கள் நேரடியாகப் பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்தது.

நண்பர்களே,

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இறுதியாகக் கட்டப்பட்டதாக மக்கள் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். ஆனால், பல ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, தில்லியில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தேசிய நினைவுச்சின்னத்தைக் கட்டியது எங்கள் அரசே என்பது குறித்து விவாதிக்கப்படுவதில்லை. அடல் அவர்களின் ஆட்சியின் போது இந்த யோசனை தொடங்கப்பட்டது, ஆனால் இந்தத் திட்டம் பத்து ஆண்டு காலமாகத் தேக்க நிலையில் இருந்தது. எங்கள் அரசு அதை நிறைவு செய்தது மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பாபாசாகேப்புடன் தொடர்புடைய முக்கிய தளங்களையும் இணைத்தது.

நண்பர்களே,

2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற லட்சியத்தை நோக்கிய இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அடியும் அதன் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, நான் மின்னணு இந்தியா பற்றிப் பேசியபோது இருந்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது பலர் நிறைய சந்தேகங்களை வெளிப்படுத்தினர். ஆனால் தற்போது, மின்னணு இந்தியா நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. குறைந்த விலையில் கிடைக்கும் தரவு மற்றும் குறைந்த விலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.  மின்னணு இந்தியா, வாழ்க்கை முறையை எவ்வாறு எளிதாக்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் காணலாம்.

இந்தப் பத்தாண்டு காலம் வரும் நூற்றாண்டுகளில் இந்தியா  மேற்கொள்ளவுள்ள திசையை வரையறுக்கப் போகிறது. நாட்டின் புதிய விதி எழுதப்படும் காலம் இதுவாகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடமும், ஒவ்வொரு நிறுவனத்திலும், ஒவ்வொரு துறையிலும் இந்த உத்வேகத்தை என்னால் காண முடிகிறது. இந்த உச்சிமாநாட்டின் போதும், நாங்கள் நடத்திய விவாதங்கள் அதே ஆற்றலையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றன. மீண்டும் ஒருமுறை, இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக ஏபீபி நெட்வொர்க்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

வணக்கம்!

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Since 2019, a total of 1,106 left wing extremists have been 'neutralised': MHA

Media Coverage

Since 2019, a total of 1,106 left wing extremists have been 'neutralised': MHA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 13, 2025
December 13, 2025

PM Modi Citizens Celebrate India Rising: PM Modi's Leadership in Attracting Investments and Ensuring Security