சுபாஷ் சந்திரபோஸ் மேலாண்மை விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
“துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பிறகு இந்தியாவின் மேலாண்மை அமைப்பின் முயற்சிகளுக்கு உலக அளவில் அங்கீகாரம்”
“ மேலாண்மை சம்பந்தமாக இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள விரிவாக்கத்தின் மூலம் சிறந்த அளவில் சேவை”
“வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் போன்றவற்றிற்கு அடிப்படை அளவிலான முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும், இந்தத் துறைகளில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்”
“அங்கீகாரம் மற்றும் சீர்திருத்தம் ஆகிய இரண்டு முக்கிய அங்கங்கள் மூலம் பேரிடர் மேலாண்மை வலுப்படும்”
“உள்ளூர் பங்களிப்பின் வாயிலாக பெறப்படும் உள்ளூர் விரிவாற்றல் மூலமே வெற்றி பெற முடியும்”
“வீடுகளின் ஆயுட்காலம், கழிவுநீர் வடிகால், மின்சார விரிவாற்றல் மற்றும் குடிநீருக்கான உள்கட்டமைப்பு போன்றவைகள் குறித்த ஆற்றலே ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபவதற்கு உதவும்”
“செயற்கை நுண்ணறிவு, 5ஜி மற்றும் இணையதள சேவைகள் பயன்பாட்டின் மூலமே வரும் காலங்களில் அவசரகால ஊர்திகளை தேவைப்படும் போது விரைந்து இயக்க முடியும்
இந்த 3-வது நிகழ்வின் முக்கிய கருப்பொருள் "மாறிவரும் பருவநிலையில் உள்ளூர் விரிவாற்றலைக் கட்டமைத்தல்" ஆகும்.

முதலாவதாகபேரிடர் மீட்புப்படை மற்றும் பேரிடர் மேலாண்மையில் தொடர்புடைய அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். ஏனென்றால்பல நேரங்களில் உங்கள் சொந்த உயிரைக் கூட பணயம் வைத்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் அற்புதமான வேலையைச் செய்கிறீர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது இரு மாநில படைகளுக்கு இன்று வழங்கப்பட்டது. புயல்சுனாமி போன்ற பல்வேறு பேரிடர்களின் போது ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதேபோல்மிசோரமின் லுங்கிலி தீயணைப்பு நிலையம் காட்டுத் தீயை அணைக்கவும்,  தீ பரவாமல் தடுக்கவும் அயராது உழைத்தது.

நண்பர்களே,

இந்த அமர்வின் கருப்பொருள் - "மாறும் காலநிலைக்கு ஏற்ப உள்ளூர் மீள்திறனை உருவாக்குதல்". இந்தியாவில் பேரிடர் மேலாண்மை தொடர்பான அமைப்பு எப்போதும் உள்ளூரிலேயே உள்ளதுதீர்வுகள் உள்ளூரிலேயே உள்ளன. எதிர்காலத் தொழில்நுட்பத்தை உள்ளூர் கட்டுமானத்துடன் இணைக்கும்போதுபேரிடர்களை எதிர்த்து நம்மால் சிறப்பாகச் செயல்பட முடியும்.

நண்பர்களே,

பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்துதல் என்பது பேரழிவுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் எதிர்காலத்தில் அது எவ்வாறு நிகழலாம் என்பதைப் புரிந்துகொள்வதோடுபேரழிவுக்கான வாய்ப்பைக் குறைக்கும் அமைப்பை உருவாக்குவதாகும்.

நண்பர்களே,

நாடு சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டு கடந்தும்பேரிடர் மேலாண்மை தொடர்பான சட்டம் இல்லை. 2001-ல் கட்ச் நிலநடுக்கத்திற்குப் பிறகுமாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் குஜராத். இச்சட்டத்தின் அடிப்படையில்2005ல்பேரிடர் மேலாண்மை சட்டத்தையும்மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்குப் பிறகுதான் இந்தியாவில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது.

நண்பர்களே,

இன்று உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட பேரிடர்களைத் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணியில் இணைந்துள்ளன. பாரம்பரியமும் தொழில்நுட்பமும் நமது பலம்.

பருவமழைக்கு முன் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சரியான நேரம் என்று நான் உணர்கிறேன். இந்த நடைமுறையை இப்போதே நாம் தொடங்கினால்பருவமழைக்கு முன்பே முடிக்க முடியும். பேரிடர்களினால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க தயாராக இருக்க முடியும்.

நன்றி

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India car sales to hit 4.7 million in FY26 despite bumps

Media Coverage

India car sales to hit 4.7 million in FY26 despite bumps
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 16, 2026
March 16, 2026

Thoughtful Strength: Balancing Security, Growth, and Autonomy Under PM Modi's Leadership