பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தோனேஷிய அதிபர் திரு. ஜோஹோ விடோடோவை இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
சமீப காலத்தில் இந்தோனேஷியா சுலவேசி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு சார்பிலும், இந்திய மக்கள் சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த மாபெரும் இயற்கை பேரிடரால் ஏற்பட்ட சவால்கள் நிறைந்த விளைவுகளை இந்தோனேஷிய மக்கள் உறுதியுடனும், தைரியத்துடனும் எதிர்கொள்வதை பிரதமர் பாராட்டினார்.
இந்தோனேஷியாவின் நண்பனாக சர்வதேச நிதியுதவி தொடர்பான அந்நாட்டின் கோரிக்கைக்கு பிரதமர், கடல்சார் கூட்டாளியாகவும் தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் இந்தியா வழங்கும் என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் மோடியின் ஆழ்ந்த அனுதாபங்களுக்கும், உதவிக்கும் அதிபர் விடோடோ நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்தியாவின் நிவாரண உதவி குறித்த நடவடிக்கைகளை அதிகாரபூர்வமாக அமைத்துக்கொள்ள இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.


