தற்சார்பு இந்தியாவுக்கு, உள்ளூர் பொருட்களை வாங்குவதைப் பிரபலப்படுத்த ஆன்மீகத் தலைவர்கள் உதவ வேண்டும் என பிரதமர்  நேற்று விடுத்த வேண்டுகோளுக்கு, நாட்டின் முக்கிய ஆன்மீக தலைவர்களிடம் அமோக ஆதரவும், வரவேற்பும் கிடைத்துள்ளது. பிரதமரின் வேண்டுகோளுக்கு  துறவிகள் சமூகம்  மிகுந்த உற்சாகத்துடன் பதில் அளித்துள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்துக்காக, உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கு குரல் கொடுக்க முன்வந்துள்ள ஆன்மீகத் தலைவர்கள், இதற்கு ஆதரவு அளிக்க உறுதி பூண்டுள்ளனர்.

நேற்று, ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி மகராஜின் 151-வது பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக 'அமைதிக்கான சிலையை' காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் ஆன்மீக தலைவர்களுக்கு ஓர் அழைப்பு விடுத்தார்.   சுதந்திரப் போராட்டத்தின் அடித்தளம் பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்டது போல்,  இன்று தற்சார்பு இந்தியாவின் அடித்தளத்தை, துறவிகளும், மடாதிபதிகளும், ஆச்சாரியார்களும் உருவாக்க  வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.  அவர்கள், தங்கள் சீடர்களிடம் பேசும் போது, தற்சார்பு இந்தியாவை முன்னேற்றுவது குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று ஆன்மீக தலைவர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமரின் அழைப்புக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் கூறுகையில், தற்சார்பு இந்தியா திட்டத்துக்காக, அவரது அமைப்பில் உள்ள இளைஞர்கள் ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர் என கூறியுள்ளார். மேலும், அன்றாட பயன்பாட்டில்  உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என  தற்சார்பு இந்தியாவுக்கான உறுதியை அவர் வலியுறுத்தியுள்ளார். 

தற்சார்பு இந்தியாவுக்கு பதஞ்சலியின், தனது சீடர்களின் ஆதரவை அளிப்பதாக பாபா ராம்தேவ் உறுதி அளித்துள்ளார்.  உள்ளூர் பொருட்கள் வாங்குவதற்கு குரல் கொடுக்க, மற்ற ஆன்மீகத் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசுவதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அழைப்புக்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘‘தற்சார்பு என்பது அடிப்படை பலம்; அது வலுவான, நிலையான நாட்டுக்கு முக்கியமானது. தனித்து நிற்காமல், நாடு மீள்வதற்கு துணை நின்று, உலகில் முக்கியத்துவமாக இருக்க வேண்டும். மக்களின் உறுதியால்தான் இது சாத்தியம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மீகத் தலைவர்களின் சார்பாக ஒருமித்த ஆதரவைத் தருவதாக கூறியுள்ள  சுவாமி அவதேஷ் ஆனந்த், பிரதமரின் அழைப்பு  எழுச்சியூட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகவத் கதாகரும் ஆன்மீக தலைவருமான தேவகி நந்தன் தாகூர் கூறுகையில், ‘‘பிரதமரின் அழைப்பை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் உள்ளூர் பொருட்களை வாங்குவதை வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ளனர்’’ எனத் தெரிவித்துள்ளார்.

தற்சார்பு இந்தியா  அழைப்புக்கான ஆதரவும் பாராட்டும் ஆன்மீகத் தலைவர்களின் செய்திகளின் மூலம் எதிரொலிக்கிறது.  தனிப்பட்ட அழைப்புக்கு மட்டும் அவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை,  உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்ற, துறவிகள் சமூகம், தங்களின் சீடர்களுக்கு ஒட்டுமொத்தமாக அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக தங்கள் கட்டமைப்பையும், வளங்களையும் பயன்படுத்துவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.  இந்த இயக்கத்துக்கான தாராள ஆதரவை பல்வேறு டிவிட்டர் தகல்கள் மூலம் அறிய முடிகிறது.

சாத்வி பகவதி சரஸ்வதி டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘கிராம மக்களின் மேம்பாட்டுக்காக உறுதியுடன் இருக்கும் தலைவர் இருக்கும் நாட்டில் வாழ்வது மிகுந்த பாக்கியம். தற்சார்பு இந்தியா இயக்கத்துக்கு நாம் அனைவரும் ஆதரவு தெரிவிப்போம். உள்ளூர் பொருட்களை வாங்க குரல் கொடுப்போம். உள்ளூர் இயற்கை உணவுப் பொருட்கள், இயற்கை சோப்புகள், கிராமப் பெண்கள் நெய்யும் கைத்தறி ஆடைகளை வாங்குவோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

பரமார்த் நிகேதன் விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில், ‘‘தற்சார்பு இந்தியாவுக்கு பிரதமர் விடுத்துள்ள அழைப்புக்கு நாம் ஆதரவு தெரிவிப்போம்.  சுற்றுச் சூழலுக்கு ஏற்ற உள்ளூர் பொருட்களை வாங்குவோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைவி, தாதி ஹரிதயா மோஹினி விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில், ‘‘மிகவும் புதுமையான, உயர்ந்த திட்டம். எங்களின் முழு ஒத்துழைப்புக்கு உறுதி அளிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆன்மீக அமைப்புகளுடன் தொடர்புடைய பலரும் பிரதமரின் அழைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆஸ்தா அமைப்பு, தேவி சித்ரலேகா ஜி, சுவாமி சுமேதானந்த், பூஜ்ய ஸ்வாமி ஜி, சாத்வி ஜெயபாரதி, ஸ்ரீ புன்ரிக் கோஸ்வாமி, சின்மயா சிவம், ஆச்சார்ய லோகேஷ் முனி, அரிஹன்ட் ரிஷி, ஸ்ரீ எம், சுவாமி உமேஷ் ஆனந்த், ஸ்ரீ ஷானிதம் அறக்கட்டளை, சாத்வி கிருஷ்ணா ஜி, கவ் சேவா தாம், யதுநாத்ஜி கோஸ்வாமி, சத்யபிரகாஷ் ஜி, சுவாமி பரமாத்மனந்தா சரஸ்வதி, ஸ்ரீ அனுராக் கிருஹஷ்ணா சாஸ்த்திரி, ஸ்ரீ கிஷன் பூஜாரி, ஹர்சினி நகேந்திர மகராஜ் ஆகியோர் டிவிட்டரில் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
After year of successes, ISRO set for big leaps

Media Coverage

After year of successes, ISRO set for big leaps
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 26, 2025
December 26, 2025

India’s Confidence, Commerce & Culture Flourish with PM Modi’s Visionary Leadership