மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். கருணை உள்ளம் கொண்ட தலைவர் என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த சிறந்த நிர்வாகி என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

“ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும், மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர்”.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Vikas Bhi, Virasat Bhi: How JATAN, AI and Digital Archives are revolutionising India’s cultural heritage preservation

Media Coverage

Vikas Bhi, Virasat Bhi: How JATAN, AI and Digital Archives are revolutionising India’s cultural heritage preservation
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் துணிச்சல் மிக்க தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
August 09, 2026

 பிரதமர் திரு நரேந்திர மோடி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற தியாகிகள் அனைவரையும் நினைவுகூர்ந்து, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் துணிச்சலுக்கும் உறுதிக்கும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் தலைமையால் உத்வேகம் பெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் அறைகூவல், சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியதுடன், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான இந்திய மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் பிரதிபலித்தது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற தியாகிகள் அனைவரையும் நினைவுகூர்கிறோம். அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் உத்வேகமாக விளங்கும். மகாத்மா காந்தியின் தலைமையால் உத்வேகம் பெற்ற வெள்ளையனே வெளியேறு முழக்கம், நமது சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியதுடன், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் பிரதிபலித்தது."