பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரிய அதிபர் திரு அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனை வியன்னாவில் இன்று சந்தித்துப் பேசினார்.  அப்போது  அதிபர் திரு வான் டெர் பெல்லன்,  வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ளதற்காக பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவின் 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும்  நிலையில், தமது ஆஸ்திரிய பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். பரஸ்பரம் இருநாடுகள் நலன் சார்ந்த சர்வதேச, இருதரப்பு விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். உலக வெப்பமயமாதலை எதிர்கொள்வதற்கு நீடித்த சுற்றுச்சூழலுக்கான கருத்துக்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறிப்பாக சூரிய, நீர்மின் சக்தி, உயிரி எரிபொருள் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் பயன் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். இதற்கிடையே, அதிபர் திரு வான் டெர் பெல்லனை இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர்  அழைப்பு விடுத்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Semiconductors to clean energy: Inside PM Modi’s high-profile meeting with 16 Dutch CEOs in The Hague

Media Coverage

Semiconductors to clean energy: Inside PM Modi’s high-profile meeting with 16 Dutch CEOs in The Hague
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 17, 2026
May 17, 2026

Stronger Bonds, Stronger Bharat: PM Modi’s Netherlands Trip Delivers Partnerships, Pride & a Future-Ready India