பட்டயக் கணக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பட்டயக்கணக்காளர்களின் துல்லியமான கணக்கீடுகளும் துறை சார்ந்த நிபுணத்துவமும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மிகவும் அவசியம் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும், பட்டயக் கணக்காளர் தின வாழ்த்துக்கள்! அவர்களது துல்லியம் மிக்க பணி, துறை சார்ந்த நிபுணத்துவம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அவசியம். இணக்க நடைமுறைகள், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் வலுவான பொருளாதாரத்திற்கு அவர்கள் பங்காற்றுகின்றனர். நிறுவனங்களின் வெற்றிகரமான செயல்பாடுகளை உறுதி செய்வதில் அவர்களின் பங்களிப்பு சிறப்பானது."
Wishing all Chartered Accountants a very happy CA Day! Their precision and expertise are essential for every organisation. By emphasising on compliance and transparency, they contribute to a healthy economy. Their role in nurturing successful corporations is also outstanding.
— Narendra Modi (@narendramodi) July 1, 2025


