In the Information era, first-mover does not matter, the best-mover does : PM
It is time for tech-solutions that are Designed in India but Deployed for the World :PM

பெங்களூரில் தொழில்நுட்ப மாநாட்டை, பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டை  கர்நாடகா புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு (KITS),  தகவல் தொழில்நுட்பம் மீதான கர்நாடக அரசின் தொலைநோக்கு குழுமம்,  உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொடக்க நிறுவனம், இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா (STPI),  எம்எம் தீவிர அறிவியல்–தொழில்நுட்ப  தகவல்தொடர்பு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கர்நாடக அரசு நடத்துகிறது.  ‘‘அடுத்தது இப்போதுதான்’’ என்பதுதான் இந்தாண்டு மாநாட்டின் கருப்பொருள்.   மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத், கர்நாடக முதல்வர் திரு பி.எஸ்.எடியூரப்பா ஆகியோர்  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

 டிஜிட்டல்  இந்தியா இன்று அரசின் வழக்கமான தொடக்க முயற்சியாக பார்க்கப்படாமல், மக்களின் வாழ்க்கையாக குறிப்பாக ஏழைகள், பின்தங்கியவர்கள், அரசுத் துறையில் உள்ளவர்களின் வாழ்க்கையாக மாறியுள்ளதைக் கூறி பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மாநாட்டில் பேசிய பிரதமர், டிஜிட்டல் இந்தியா காரணமாக, வளர்ச்சிக்கான மக்கள் மைய அணுகுமுறையை நமது நாடு அதிகம் கண்டுள்ளது என்றார்.  தொழில்நுட்பத்தை மிகப் பெரிய அளவில் பயன்படுத்தியது, மக்களுக்கு பல மாற்றங்களைக் கொண்டு வந்தது எனவும்  அதன் பயன்கள் தெளிவாகத் தெரிகின்றன என்றும் அவர் கூறினார்.  டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளுக்காக மட்டும் சந்தைகளை அரசு உருவாக்கவில்லை என்றும், அனைத்து திட்டங்களுக்கும் முக்கிய அங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். தொழில்நுட்பத்துக்கு, தனது அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், அந்தத் தொழில்நுட்பம் மூலம்தான் மனிதர்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது என்றும் அவர் கூறினார்.  கோடிக்கணக்கான விவசாயிகள் ஒரு ‘கிளிக்’-கில் மானிய உதவிகள் பெறுவதையும், உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமான, ஆயுஷ்மான் பாரத் போன்றவற்றை பிரதமர் உதாரணமாக குறிப்பிட்டார்.  முடக்க காலத்திலும், இந்தியாவின் ஏழைகள் முறையான மற்றும் விரைவான உதவி பெற தொழில்நுட்பம் உறுதி செய்ததை அவர் வலியுறுத்தினார்.  இந்த அளவு நிவாரணத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லை என அவர் கூறினார்.

சேவைகளைத் திறம்பட வழங்க, தரவு பகுப்பாய்வின் சக்தியை அரசு பயன்படுத்தியாக பிரதமர் கூறினார்.  நமது திட்டங்கள் கோப்புகளை மிஞ்சி, மக்களின் வாழ்க்கையை விரைவாகவும், உயர்ந்த அளவிலும் மாற்றியதற்கு தொழில்நுட்பம்தான் முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டார்.  தொழில்நுட்பம் காரணமாக நம்மால் அனைவருக்கும் மின்சாரம் வழங்க முடிகிறது , சுங்கச்சாவடிகளை வேகமாக கடந்து செல்ல முடிகிறது, குறைந்த காலத்தில் மிகப் பெரிய மக்கள் தொகைக்கு தடுப்பூசி வழங்க முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக பிரதமர் கூறினார்.

இந்த பெருந்தொற்று காலத்தில் தொழில்நுட்ப துறை, தனது ஆற்றலை வெளிப்படுத்தியதை பிரதமர் பாராட்டினார். 10 ஆண்டுகளில் ஏற்பட வேண்டிய தொழில்நுட்ப மாற்றங்கள், சில மாதங்களில் நடந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.  எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற நிலை வழக்கமாகிவிட்டது. இது நீடிக்கப் போகிறது என்றும் அவர் கூறினார்.  கல்வி, சுகாதாரத்துறை, பொருட்கள் வாங்குவது போன்றவற்றில், அதிகளவிலான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொழில்துறை சாதனைகள் எல்லாம்  முடிந்து போனவை. நாம் தற்போது தகவல் யுகத்தின் மத்தியில் உள்ளோம் என பிரதமர் கூறினார்.  தொழில்துறை யுகத்தில் மாற்றம் நேரடியானது. ஆனால் தகவல் யுகத்தில் மாற்றம் சிக்கலானது.   தொழில்துறை யுகம் மாதிரி அல்லாமல், தகவல் யுகத்தில் முதலில் வருவது  முக்கியமல்ல,  சிறந்ததுதான் முக்கியம். சந்தையில் உள்ள அனைத்தையும் சீர்குலைக்க, யாரும், எந்தப் பொருளையும், எப்போது வேண்டுமானாலும் உருவாக்கலாம் என அவர் கூறினார்.   

தகவல் யுகத்தில், முன்னோக்கி செல்ல இந்தியா தனிச்சிறப்பான இடத்தில் உள்ளது என பிரதமர் கூறினார்.  திறமையானவர்களும், பெரிய சந்தையும், இந்தியாவில் உள்ளன என பிரதமர் கூறினார். நமது உள்நாட்டு தொழில்நுட்பத் தீர்வுகள், உலகளவில் செல்லும் ஆற்றல் வாய்ந்தவை என அவர் சுட்டிக்காட்டினார்.  தொழில்நுட்பத் தீர்வுகள் இந்தியாவில் உருவாகி, உலகளவில் செல்லக்கூடிய நேரம் இது என அவர் வலியுறுத்தினார்.  அரசின்  கொள்கை முடிவுகள் எப்போதும் தொழில்நுட்ப மற்றும் புதுமை கண்டுபிடிப்பை தாராளமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன எனவும், தகவல் தொழில்நுட்பத் துறை மீதான சுமைகள் எல்லாம் சமீபத்தில் எளிதாக்கப்பட்டன எனவும் பிரதமர் கூறினார்.  தொழில்நுட்ப துறையினருடன் பேசி,  நாட்டுக்கான எதிர்கால கொள்கைத் திட்டங்களை வகுக்க அரசு எப்போதும் முயற்சிக்கிறது என அவர் கூறினார்.

ஒரு கட்டமைப்பு மனநிலையானது பல வெற்றிகரமான தயாரிப்புகளின் சூழல் அமைப்பை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது என பிரதமர் கூறினார்.  யுபிஐ, தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம், ஸ்வாமித்வா திட்டம்  போன்ற பல கட்டமைப்பு மனநிலை நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.  பாதுகாப்புத்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கையையும் தொழில்நுட்பம் அமைக்கிறது என அவர் கூறினார்.  தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிப்பதால், தரவுப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு ஆகியவையும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.  சைபர் தாக்குதல், கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் போன்றவற்றைத் தடுக்கும் சைபர் பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்குவதிலும், இளைஞர்கள் மிகப் பெரியளவில் பங்காற்ற முடியும் என  அவர் கூறினார்.

உயிரி அறிவியல், பொறியியல் போன்ற துறைகளிலும், புதுமை கண்டுபிடிப்பு தேவை என பிரதமர் கூறினார். முன்னேற்றத்துக்கு புதுமை கண்டுபிடிப்பு முக்கியம் எனவும், அதற்கேற்ற திறமையான, ஆர்வமான இளைஞர்கள் நம்நாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.  நமது இளைஞர்களின் ஆற்றல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான சாத்தியங்களும்  முடிவில்லாதது என அவர்  மேலும் கூறினார்.  நாம் சிறந்தவற்றை வழங்கி, அவர்களை ஊக்குவிக்கும்  நேரம் இது.  நமது தகவல் தொழில்நுட்பத் துறை, நம்மை தொடர்ந்து பெருமைப்பட வைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s position set to rise in global supply chains with huge chip investments

Media Coverage

India’s position set to rise in global supply chains with huge chip investments
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 8, 2024
September 08, 2024

PM Modo progressive policies uniting the world and bringing development in India