சட்ட உதவி வழங்கும் முறையை வலுப்படுத்துவது குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி உச்சநீதிமன்றத்தில் 2025 நவம்பர் 08 அன்று மாலை 5.00 மணிக்குத் தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தேசிய சட்ட உதவிகள் ஆணையத்தின் சமூக சமரச பயிற்சி தொகுப்பை பிரதமர் தொடங்கிவைத்து உரையாற்றவுள்ளார்.
2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் சட்ட உதவி பாதுகாப்பு குழுமம் முறை, வழக்கறிஞர்கள், சட்ட தன்னார்வலர்கள், சட்ட சேவைகள் நிறுவனங்களின் நிதி மேலாண்மை போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.


