PM Luxon warmly congratulates Prime Minister on his re-election
Both leaders reiterate their commitment to advance bilateral ties rooted in shared democratic values and people-to-people ties
They agree to advance cooperation in trade, animal husbandry, pharmaceuticals, education, space and other areas
PM thanks PM Luxon for looking after the interests of the Indian diaspora. PM Luxon assures of their security and well-being

பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் லக்சன் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தார்

பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், மக்களுக்கு இடையேயான உறவுகளில் வேரூன்றிய இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்

வர்த்தகம், கால்நடை பராமரிப்பு, மருந்துகள், கல்வி, விண்வெளி, இதர துறைகள் ஆகியவற்றில்  ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்

வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன்களை கவனித்து வரும் பிரதமர் லக்சனுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். அவர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்கு பிரதமர் லக்சன் உறுதி தெரிவித்தார்

நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸன் பிரதமர் திரு. நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மோடிக்கு பிரதமர் லக்சன் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா-நியூசிலாந்து உறவுகள், பகிர்ந்து கொள்ளப்பட்ட ஜனநாயக மாண்புகள், மக்களுக்கு இடையேயான நெருக்கமான உறவுகள் ஆகியவற்றில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட இரு தலைவர்களும், வரும் ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்  உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட தொடர்புகள் ஏற்படுத்தியுள்ள உத்வேகத்தை எடுத்துரைத்த அவர்கள், வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, கால்நடை பராமரிப்பு, மருந்துகள், கல்வி, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பரம் பயனளிக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக் கொண்டனர்.

நியூசிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினரின் நலன்களை கவனித்து வரும் பிரதமர் லக்சனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான முயற்சிகள் தொடரும் என்று பிரதமர் லக்சன் உறுதியளித்தார்.

இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How PLI schemes, design in India and manufacturing excellence are transforming the architectural lighting industry

Media Coverage

How PLI schemes, design in India and manufacturing excellence are transforming the architectural lighting industry
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 28, 2026
July 28, 2026

From Factories to Space & High-Speed Rail: How PM Modi’s Vision is Rewiring India’s Future