Today, India is a land of immense opportunities for the energy sector: PM
India–EU FTA is a remarkable example of coordination between two of the world’s largest economies: PM
India is now moving beyond energy security towards the mission of energy independence: PM
Our energy sector is at the heart of our aspirations, with $500 billion in investment opportunities. So, Make in India, Innovate in India, Scale with India, Invest in India: PM

இந்திய எரிசக்தி வாரம் 2026-ன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிசக்தி வாரத்தின் இந்தப் புதிய பதிப்பில், சுமார் 125 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கோவாவில் கூடியுள்ளதாகக் கூறினார். எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நீடித்த எதிர்காலம் குறித்து விவாதிக்க அவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் பங்கேற்பாளர்கள் அனைவரையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இந்திய  எரிசக்தி வாரம் மிகக் குறுகிய காலத்தில் உரையாடல் மற்றும் நடவடிக்கைக்கான உலகளாவிய தளமாக உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், எரிசக்தித் துறைக்கு இந்தியாவில் பெரும் வாய்ப்பு உள்ளதாக கூறினார். உலகின் விரைவாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் எரிசக்தி தயாரிப்புகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார். உலகளாவிய தேவையை எதிர்கொள்வதற்கான சிறந்த வாய்ப்புகள் இந்தியாவிடமும் உள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். உலகில் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியில் முதல் 5  நாடுகளில் ஒன்றான இந்தியா 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு அதை ஏற்றுமதி

செய்வதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் இந்தத் திறன் அனைவருக்கும் பெரும் பயனளிக்கும் என்று அவர் கூறினார். எரிசக்திவார தளம் கூட்டாண்மையைக் கண்டறிவதற்கான சிறந்த இடம் என்றும் பங்கேற்பாளர்கள்  அனைவருக்கும் தமது பெரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்தார்.

தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு முன்பாக ஒரு பெரிய முன்னேற்ற நடவடிக்கைக் குறித்து சுட்டிக்காட்டு விரும்புவதாகக் குறிப்பிட்டார். இந்திய – ஐரோப்பிய யூனியன் இடையே நேற்று கையெழுத்தான மகத்துவம் மிக்க ஒப்பந்தத்தை அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என்று உலக நாடுகளின் மக்கள்  அழைக்கிறார்கள் என்று கூறினார். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கும் பெரும் வாய்ப்புகளை அளிப்பதாக தெரிவித்தார். உலகின் மிகப் பெரிய இரண்டு பொருளாதார நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க உதாரணமாக இது திகழ்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

இந்த ஒப்பந்தம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்தையும் உலகளாவிய வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கையும் பங்களிப்பு செய்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM announces exam reform task force, Infosys co-founder Nandan Nilekani to lead

Media Coverage

PM announces exam reform task force, Infosys co-founder Nandan Nilekani to lead
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam, highlights noble character as the foundation of respect, trust, and effective leadership
July 27, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting how a person of noble character earns respect in society and is regarded as worthy of every responsibility.

The Prime Minister wrote on X;

"शीलवान् पूजितो लोके शीलवान् साधुसम्मतः।

शीलवान् सर्वकर्मार्हः शीलवान् प्रियदर्शनः॥"

A person of noble character earns respect in society and the esteem of the virtuous. Through integrity, humility and disciplined conduct, such an individual is regarded as worthy of every responsibility. Their personality is admirable, inspiring and worthy of emulation. In truth, noble character is the true foundation of lasting success, effective leadership, and enduring trust.