பகிர்ந்து
 
Comments

மேதகு பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களே, சிறப்புமிக்க பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே வணக்கம்!

முதலில் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

பிரதமர் என்ற முறையில் இது அவரது முதலாவது பயணமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பழைய நண்பர் என்ற முறையில் அவர் இந்தியாவைப்பற்றி நன்கு அறிந்தவராவார். பல ஆண்டுகளாக, பிரதமர் ஜான்சன், இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கை ஆற்றியுள்ளார்.

விடுதலையின் அமிர்த காலத்தை நாம் கொண்டாடும் வேளையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் வரலாற்று முக்கியத்துவத்தைக்கொண்டுள்ளது.

நண்பர்களே, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே விரிவான மூலோபாய கூட்டாண்மையை நாம் ஏற்படுத்தினோம். நமது உறவுக்கு ஒரு திசையைக்காட்டும் வகையில் 2030 வழிகாட்டுதல் இலக்கை நாம் வகுத்துள்ளோம். நமது பேச்சுவார்த்தையில், வருங்காலத்துக்கான இலக்குகளையும் வகுத்துள்ளோம்.

கடந்த சில ஆண்டுகளில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளது. அதேவேகம் மற்றும் அர்ப்பணிப்புடன் இங்கிலாந்துடனும்  ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறோம்.

இந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. இதைப்போல பாதுகாப்புத் துறையிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தத் துறையில் உற்பத்தி, தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் தற்சார்பு இந்தியாவுக்கான திட்டத்தில் பிரிட்டனின் ஆதரவை வரவேற்கிறோம்.

பிரிட்டனில் வசிக்கும் 16 லட்சம் இந்திய வம்சாவளியினர் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தங்களது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவர்களது சாதனைகளைக் கண்டு நாம் பெருமிதம் கொள்கிறோம். நமது இணைப்பு பாலத்தை மேலும் வலுப்படுத்த நாம் விரும்புகிறோம். இதில் பிரதமர் ஜான்சன் தனிப்பட்ட முறையில் பங்களித்துள்ளார். இதற்காக அவரை நான் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே, கிளாஸ்கோ சிஓபி-26 உச்சிமாநாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இன்று பருவநிலை மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாம் இசைந்துள்ளோம்.

உக்ரைனில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வரவேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். ஆப்கானிஸ்தான் குறித்தும் நாம் பேச்சு நடத்தியுள்ளோம். அங்கு அமைதி, நிலைத்தன்மையை வலியுறுத்துவதுடன், மற்ற நாடுகளில் பயங்கரவாதத்தைப் பரப்ப ஆப்கானிஸ்தானை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மீண்டும் ஒரு முறை உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி!

Share beneficiary interaction videos of India's evolving story..
Explore More
Do things that you enjoy and that is when you will get the maximum outcome: PM Modi at Pariksha Pe Charcha

பிரபலமான பேச்சுகள்

Do things that you enjoy and that is when you will get the maximum outcome: PM Modi at Pariksha Pe Charcha
Smriti Irani writes: On women’s rights, West takes a backward step, and India shows the way

Media Coverage

Smriti Irani writes: On women’s rights, West takes a backward step, and India shows the way
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
ஜி-7 உச்சிமாநாட்டையொட்டி அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் சந்திப்பு
June 27, 2022
பகிர்ந்து
 
Comments

ஜி-7 உச்சிமாநாட்டையொட்டி, அர்ஜென்டினா அதிபர் மேதகு திரு ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸை  பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 26, 2022 அன்று முனிச்சில் சந்தித்துப் பேசினார்.

இரு தலைவர்கள் இடையேயான முதலாவது இருதரப்பு சந்திப்பாக இது அமைந்தது. 2019-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இருதரப்பு கேந்திர கூட்டுமுயற்சியை அமல்படுத்துவதற்கான பணியை அவர்கள் ஆய்வு செய்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடு; வளரும் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு, குறிப்பாக மருந்தகத் துறை, பருவநிலை செயல்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அணு மருத்துவம், மின்சார இயக்கம், ராணுவ ஒத்துழைப்பு, வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு, பாரம்பரிய மருத்துவம், கலாச்சார ஒத்துழைப்பு, சர்வதேச அமைப்புகளில் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் இசைவு தெரிவித்தனர்.