கிரீஸ் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகப் பிரதிநிதிகளுடனான மதிய விருந்துக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று கலந்துரையாடினார்பத்திரிகை தகவல் அலுவலகம் இந்திய அரசு சென்னை Prime Minister’s interaction at the Business Lunch hosted by Prime Minister of Greece கிரீஸ் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகப் பிரதிநிதிகளுடனான மதிய விருந்துக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று கலந்துரையாடினார் புதுதில்லி, ஆகஸ்ட் 25, 2023 ஏதென்ஸில் கிரீஸ் பிரதமர் திரு கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் இன்று (25-08-2023) ஏற்பாடு செய்திருந்த வணிக மதிய விருந்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி இந்திய மற்றும் கிரேக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டார்ட் அப், பார்மா, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் வணிகத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்ச

Published By : Admin | August 25, 2023 | 20:33 IST

ஏதென்ஸில் கிரீஸ் பிரதமர் திரு கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் இன்று (25-08-2023) ஏற்பாடு செய்திருந்த வணிக மதிய விருந்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி இந்திய மற்றும் கிரேக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டார்ட் அப், பார்மா, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் வணிகத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையின் போது எடுத்துரைத்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், இந்தியாவுக்கும் கிரீஸுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் இந்த தொழில்துறையினரின் பங்கை அவர் பாராட்டினார்.

 

இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக இருக்குமாறும் கிரீஸ் தொழில் மற்றும் வர்த்தகத் துறையினரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் பின்வரும் நிறுவனங்களின் சார்பில் பின்வரும்  அதிகாரிகள் பங்கேற்றனர்.

1.         எல்பென்     நிறுவனம் - திரு தியோடர் ஈ. ட்ரைபோன் – தலைமைச் செயல் அதிகாரி

2.         கெக் டெர்னா குழுமம் -            திரு.ஜார்ஜியோஸ் பெரிஸ்டிரிஸ் -இயக்குநர்கள் வாரியத் தலைவர்

3.         நெப்டியூன்ஸ் லைன்ஸ் ஷிப்பிங் மற்றும் மேனேஜிங் எண்டர்பிரைசஸ் எஸ்.ஏ.            நிறுவனம் - திருமதி மெலினா ட்ராவ்லூ, இயக்குநர்கள் வாரியத் தலைவர்

4.         சிப்பிட்டா எஸ்.ஏ. நிறுவனம் -           திரு.ஸ்பைரோஸ் தியோடோரோ பௌலோஸ் - நிறுவனர்

5.         யூரோபேங்க் எஸ்.ஏ. நிறுவனம்-      திரு ஃபோக்கியன் கராவியாஸ், தலைமைச் செயல் அதிகாரி

6.         டெம்ஸ் எஸ்.ஏ.     நிறுவனம் - திரு. அகில்லெஸ் கான்ஸ்டாகோபௌலோஸ், தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

7.         மைட்டிலினோஸ் குழுமம்      - திரு. எவாஞ்சலோஸ் மைடிலினோஸ் - தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

8.         டைட்டன் சிமெண்ட் குழுமம்            - திரு. டிமிட்ரி பாபலெக்ஸோபௌலோஸ் – இயக்குநர்கள் வாரியத் தலைவர்

9.         இன்டாஸ் பார்மாசூட்டிகல்ஸ் -        திரு.பினிஷ் சுட்கர் - துணைத் தலைவர்

10.       இஇபிசி நிறுவனம் -      திரு.அருண் கரோடியா -  தலைவர்

11.       எம்குரே ஃபார்மசுட்டிக்கல்ஸ் -         திரு சமித் மேத்தா, மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

12.       ஜிஎம்ஆர் குழுமம்           - ஸ்ரீநிவாஸ் பொம்மிடாலா - குழும இயக்குநர்

13.       ஐடிசி            நிறுவனம் - சஞ்சீவ் பூரி - தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்

14.       யுபிஎல்         - திரு விக்ரம் ஷெராஃப்-  இயக்குநர்

15.       ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் -           ஹரிஷ் அஹுஜா – மேலாண்மை இயக்குநர்

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India outpaces global AI adoption: BCG survey

Media Coverage

India outpaces global AI adoption: BCG survey
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 17, 2025
January 17, 2025

Appreciation for PM Modi’s Effort taken to Blend Tradition with Technology to Ensure Holistic Growth