"சேவா தீர்த்" என்று அழைக்கப்படும் பிரதமரின் புதிய அலுவலகக் கட்டிடம் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்படும் முதலாவது முடிவுகளில், சேவை உணர்வைப் பிரதிபலிக்கும் முடிவுகள் தொடர்பான முக்கியக் கோப்புகளில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இந்த முடிவுகள் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடைகிறது.
1. பிரதமரின் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக் மருத்துவமனையில் அனுமதி மற்றும் உறுதியளிக்கப்பட்ட சிகிச்சை (பிஎம் ரஹாத்) திட்டம்: ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் காக்கும் பாதுகாப்பு
பிரதமரின் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதி மற்றும் உறுதியளிக்கப்பட்ட சிகிச்சை (பிஎம் ரஹாத்) திட்டத்தைத் தொடங்குவதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த முன் முயற்சியின் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ1.5 லட்சம் வரை ரொக்கமில்லா மருத்துவ சிகிச்சை வசதி கிடைப்பதுடன், உடனடி மருத்துவ உதவி இல்லாத காரணமாக, எவ்வித உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்பதற்கு உதவிடும்.
2. லட்சாதிபதி சகோதரி என்ற எண்ணிக்கைக்கான இலக்கை 6 கோடியாக இரட்டிப்பாக்குதல்
மத்திய அரசு 2027 - ம் ஆண்டு மார்ச் மாதத்தில், நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்கும், ஒரு ஆண்டு முன்னதாகவே, 3 கோடி எண்ணிக்கையிலான லட்சாதிபதி சகோதரிகளுக்கான இலக்கைக் கடந்துள்ளது.
எனவே, தற்போது 2029 - ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 6 கோடி எண்ணிக்கையிலான லட்சாதிபதி சகோதரிகளுக்கான புதிய, லட்சிய இலக்கை, பிரதமர் நிர்ணயித்துள்ளார். இத்திட்டத்தின் எண்ணிக்கை மற்றும் விருப்பத்தை இது இரட்டிப்பாக்குகிறது.
3. விவசாயிகளுக்கு உத்வேகம் அளிக்கும் முக்கிய நடவடிக்கை: வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கடன் இலக்கு ரூ 2 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முழுமையான வேளாண் விவசாய மதிப்புத் தொடரை வலுப்படுத்தும் நோக்கில், வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கடன் இலக்கை ரூ 1 லட்சம் கோடியிலிருந்து, ரூ 2 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
4. ரூ 10,000 கோடி நிதி திரட்டும் நடவடிக்கைகளுடன் கூடிய புத்தொழில் இந்தியா நிதியம் 2.0 - புதுமையின் அடுத்த கட்ட முயற்சி
இந்தியாவின் புதுமைக் கண்டுபிடுப்புகளுக்கானச்சூழல் அமைப்பை, குறிப்பாக, வலுவான தொழில்நுட்பம், தொடக்க நிலை யோசனைகள், மேம்பட்ட உற்பத்தி மற்றும் திருப்புமுனையாக உள்ள தொழில்நுட்பங்களில், பிரதமர் ரூ 10,000 கோடி நிதி திரட்டலுடன் கூடிய புத்தொழில் இந்தியா நிதியம் 2.0-க்கு ஒப்புதல் அளித்துள்ளார்.


