சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றிய, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட, மிகுந்த மனநிறைவளிக்கும் ஒரு தேசிய முயற்சி குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
தனது அஸ்தி ஒரு நாள் சுதந்திர இந்தியாவிற்குத் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா 1930-ல் காலமானார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து அவரது அஸ்தியைக் கொண்டு வருவதற்காக, அப்போதைய குஜராத் முதலமைச்சர் திரு நரேந்திர மோடி 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முயற்சியை மேற்கொள்ளும் வரை, இந்த மேன்மையான விருப்பம் பல தசாப்தங்களாக நிறைவேறாமல் இருந்தது.
இந்த முயற்சி, பாரத அன்னையின் துணிச்சல் மிக்க புதல்வரின் நினைவைப் போற்றியதுடன், நாட்டின் சுதந்திர இயக்கத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது என்று அவர் குறிப்பிட்டார்.
ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் வாழ்க்கை, நீதிக்கான அவரது அச்சமற்ற தேடல், மற்றும் இந்தியாவின் சுதந்திரத்திற்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பற்றி அதிகமான இந்திய இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து எக்ஸ் சமூக ஊடக தளத்தில் 'மோடி ஆர்கைவ்' பக்கத்தின் பதிவிற்குப் பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
“சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மிகவும் மனநிறைவான ஒரு முயற்சியை இந்தத் தொடர் பதிவுகள் எடுத்துரைக்கின்றன. இதன் மூலம் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் விருப்பம் நிறைவேற்றப்பட்டு, பாரத அன்னையின் துணிச்சல் மிக்க புதல்வர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெருமையையும் வீரத்தையும் பற்றி இன்னும் அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும்!”
This thread highlights a very satisfying effort undertaken about two decades ago, thus fulfilling a wish of Shyamji Krishna Varma and honouring a courageous son of Maa Bharti.
— Narendra Modi (@narendramodi) October 4, 2025
May more youngsters read about his greatness and bravery! https://t.co/H6NwdQC3zu


