ஹெல்லனிக் குடியரசின் (கிரீஸ்) பிரதமர் திரு கிரியகோஸ் மிட்சோடக்கீஸ் இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு, கிரீஸ் பிரதமர் மிட்சோடக்கீஸ் வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து பிரதமர் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது என இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர். இந்தியா – கிரீஸ் நாடுகளிடையே உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் ஒப்புக் கொண்டனர்.
இந்தியா – ஐரோப்பிய நாடுகளிடையே பரஸ்பரம் நன்மை தரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவுக்கு வர கிரீஸ் ஆதரவளிக்கும் என்றும் 2026-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த உச்சிமாநாடு வெற்றி பெறவும் வாழ்த்துவதாக கிரீஸ் பிரதமர் திரு மிட்சோடக்கீஸ் தெரிவித்தார்.
இரு தலைவர்களும் பிராந்திய மற்றும் சர்வதேச விவாகரங்கள் குறித்த பரஸ்பரம் நலன் சார்ந்த அம்சங்கள் குறித்து தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இரு நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்வது எனவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
A pleasure speaking with Prime Minister Mitsotakis today. Grateful for his warm birthday wishes. India-Greece Strategic Partnership continues to grow across trade, investment, connectivity, defence, security and people-to-people linkages. We reaffirmed our commitment to early…
— Narendra Modi (@narendramodi) September 19, 2025


