மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் செயல்திறன் மற்றும் திட்டங்கள் மக்களிடையே சென்றடைவதற்கான நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
"இது பாராட்டத்தக்க உயர்வு, மக்களின் நலன் சார்ந்த வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டையும், நலத்திட்டங்கள் அதிகபட்ச மக்களைச் சென்றடைவதையும் உறுதி செய்கிறது."
This is a commendable rise, indicating our commitment towards welfare-driven development and ensuring our various pro-people schemes reach maximum number of people. https://t.co/pxVNxXf51k
— Narendra Modi (@narendramodi) June 11, 2025


