சமூக நல்லிணக்கம், சீர்திருத்தத்திற்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட சந்த் கபீர் தாஸின் பிறந்த தினத்தையொட்டி இன்று அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"வாழ்நாள் முழுவதும் சமூக நல்லிணக்கத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட சந்த் கபீர் தாஸ் பிறந்த தினத்தில் அவருக்கு எனது மனமார்ந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இருவரிப் பாடல்களில் வார்த்தைகளில் எளிமை இருந்தாலும், உணர்ச்சிகளின் ஆழமும் உள்ளது. அதனால்தான் தற்போதும் கூட அவர் இந்திய ஆன்மாவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். சமூகத்தில் நிலவும் தீமைகளை அகற்றுவதில் அவரது பங்களிப்பு என்றும் பயபக்தியுடன் நினைவுகூரப்படும்."
सामाजिक समरसता के प्रति आजीवन समर्पित रहे संत कबीरदास जी को उनकी जयंती पर मेरा कोटि-कोटि नमन। उनके दोहों में जहां शब्दों की सरलता है, वहीं भावों की प्रगाढ़ता भी है। इसलिए आज भी भारतीय जनमानस पर उनका गहरा प्रभाव है। समाज में फैली कुरीतियों को दूर करने में उनके योगदान को हमेशा… pic.twitter.com/5d7ArARMHH
— Narendra Modi (@narendramodi) June 11, 2025


