பிரதமர் திரு. நரேந்திர மோடி, வீர் சாவர்க்கர் அவர்களின் பிறந்தநாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். "சுதந்திர இயக்கத்தில் அவரது அசாத்தியமான துணிச்சல் மற்றும் போராட்டத்தின் சகாப்தத்தை நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்க முடியாது. நாட்டிற்கான அவரது தியாகமும் அர்ப்பணிப்பும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும்" என்று திரு. மோடி கூறினார்.
பிரதமர் சமூக வலைதளமான எக்ஸ் இல் பதிவிட்டுள்ளதாவது:
"பாரத தாயின் உண்மையான மகனான வீர் சாவர்க்கருக்கு அவரது பிறந்த நாளில் மரியாதைக்குரிய அஞ்சலிகள். அந்நிய ஆட்சியின் கடுமையான சித்திரவதைகள் கூட தாய்நாட்டின் மீதான அவரது பக்தியை அசைக்க முடியவில்லை. சுதந்திர இயக்கத்தில் அவரது அசாத்திய துணிச்சல் மற்றும் போராட்டத்தின் சகாப்தத்தை நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்க முடியாது. நாட்டிற்கான அவரது தியாகமும் அர்ப்பணிப்பும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் தொடர்ந்து வழிகாட்டும் ஒளியாக இருக்கும்."
भारत माता के सच्चे सपूत वीर सावरकर जी को उनकी जन्म-जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। विदेशी हुकूमत की कठोर से कठोर यातनाएं भी मातृभूमि के प्रति उनके समर्पण भाव को डिगा नहीं पाईं। आजादी के आंदोलन में उनके अदम्य साहस और संघर्ष की गाथा को कृतज्ञ राष्ट्र कभी भुला नहीं सकता। देश के लिए… pic.twitter.com/3OsxSN905I
— Narendra Modi (@narendramodi) May 28, 2025


