ராஜஸ்தானில் எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்
மத்திய, மாநில அரசுகள் இன்று நல்லாட்சியின் அடையாளமாக மாறி வருகின்றன: பிரதமர்
இந்த 10 ஆண்டுகளில், நாட்டு மக்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும், அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்கும் நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம்: பிரதமர்
தீர்வுகளை வழங்குவதில் எதிர்ப்பு அற்ற, ஒத்துழைப்பை நாங்கள் நம்புகிறோம்: பிரதமர்
ராஜஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நாளையும், ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு போதுமான தண்ணீர் இருக்கும் நாளையும் நான் காண்கிறேன்: பிரதமர்
நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது, ஒவ்வொரு சொட்டு நீரையும் பயன்படுத்துவது அரசின் பொறுப்பு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்: பிரதமர்
ராஜஸ்தானில் சூரியசக்தி மின்சாரத்துக்கு அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன. இந்தத் துறையில் அது நாட்டின் முன்னணி மாநிலமாக மாற முடியும்: பிரதமர்

ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டு நிறைவையொட்டி கொண்டாடப்பட்ட "ஓராண்டு முடிவில் முன்னேற்றம்" நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ராஜஸ்தான் அரசுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்கு புதிய திசை காட்டுவற்கும் வேகத்தை அதிகரிப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை திரு மோடி பாராட்டினார். முதலாம் ஆண்டு வரவிருக்கும் பல ஆண்டு வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி அரசின் ஓராண்டு நிறைவைக் குறிப்பது மட்டுமின்றி, ராஜஸ்தானின் பிரகாசமான ஒளியையும் ராஜஸ்தானின் வளர்ச்சித் திருவிழாவையும் அடையாளப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தான் எழுச்சி உச்சி மாநாடு 2024-க்கு அண்மையில் தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த திரு மோடி, உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்கள் அதில் கலந்து கொண்டதாகவும், இன்று ரூ .45,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானில் தண்ணீர் தொடர்பாக எதிர்கொள்ளும் தடைகளுக்கு பொருத்தமான தீர்வை வழங்கும் என்றும், இந்தியாவுடன் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானை மாற்றும் என்றும் அவர் கூறினார். இந்த வளர்ச்சிப் பணிகள் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும், சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும். ராஜஸ்தானின் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

மத்திய, மாநில அரசுகள் இன்று நல்லாட்சியின் அடையாளமாக மாறி வருகின்றன என்று திரு மோடி கூறினார். மக்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதை தங்கள் அரசு உறுதி செய்யும் என்று அவர் மேலும் கூறினார். இன்று, நல்லாட்சிக்கான உத்தரவாதத்தின் அடையாளமாக தமது கட்சி இருப்பதாக மக்கள் கருதுவதாகவும், அதனால்தான் பல மாநிலங்களில் பொதுமக்களின் ஆதரவு கிடைப்பதாகவும் அவர் மேலும் கூறினார். தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், கடந்த 60 ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஒரே கட்சி மத்திய அரசை அமைக்கும் முன்னுதாரணம் இல்லை என்று கூறினார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் தொடர்ந்து இரண்டு முறை தங்களைத் தேர்ந்தெடுத்து மக்கள் அளித்த ஆதரவுக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார், இது அவர்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்ததற்காக திரு. பைரோன் சிங் ஷெகாவத் தலைமையிலான ராஜஸ்தானின் முந்தைய அரசுகளுக்கும், நல்லாட்சியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றதற்காக திருமதி வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கும்  நன்றி தெரிவித்த திரு மோடி, திரு. பஜன்லால் சர்மாவின் தற்போதைய அரசு நல்ல நிர்வாகத்தின் பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார். கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் இதன் பலனைக் காட்டுகின்றன என்றும் அவர் கூறினார். கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறிய திரு மோடி, ஏழைக் குடும்பங்கள், பெண்கள், தொழிலாளர்கள், விஸ்வகர்மாக்கள் மற்றும் நாடோடி பழங்குடியினர் ஆகியோரின் வளர்ச்சிக்காக பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பு மோசடிகள் போன்ற குறைபாடுகள் முந்தைய அரசின் அடையாளமாக இருப்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது பிரச்சினைகளை தீர்க்கும் செயல்முறையை தற்போதைய அரசு செய்து வருவதாகவும் கூறினார். கடந்த ஓராண்டில் தற்போதைய ராஜஸ்தான் அரசு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். வேலைத் தேர்வுகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுவதாகவும், அவ்வாறே நியமனங்களும் செய்யப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சிகளின் போது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ராஜஸ்தான் மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். தற்போதைய ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையில் மக்கள் நிவாரணம் பெற்றுள்ளனர். பிரதமரின் கிசான் வெகுமதி நிதித் திட்டத்தின் மூலம் மத்திய அரசு நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைக்கிறது என்றும், ராஜஸ்தான் மாநில அரசு விவசாயிகளுக்கு ஆதரவளிக்க கூடுதல் நிதியைச் சேர்க்கிறது என்றும் திரு மோடி கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவதன் மூலம் உள்கட்டமைப்புத் திட்டங்களை களத்தில் விரைவாக செயல்படுத்தி வருவதாகவும், இன்றைய திட்டம் இந்த உறுதிப்பாட்டின் குறிப்பிடத்தக்க பகுதியாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

ராஜஸ்தான் மக்களின் ஆசீர்வாதத்துடன், கடந்த 10 ஆண்டுகளாக ராஜஸ்தான் அரசு மத்தியில் ஆட்சியில் உள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த 10 ஆண்டுகளில், மக்களுக்கு வசதிகளை வழங்குவதிலும், அவர்களின் சிரமங்களைக் குறைப்பதிலும் அவர்கள் கவனம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார். சுதந்திரம் அடைந்த 5-6 தசாப்தங்களில் முந்தைய அரசுகள் சாதித்ததை விட 10 ஆண்டுகளில் அவை அதிகம் சாதித்துள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். ராஜஸ்தானில் நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், ராஜஸ்தானில் பல பகுதிகளில் கடும் வறட்சியால் அவதிப்படுவதாகவும், மற்ற பகுதிகளில் ஆற்று நீர் பயன்படுத்தப்படாமல் கடலில் கலப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நதிகளை இணைக்க திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் திட்டமிட்டதாகவும், அதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைத்ததாகவும் குறிப்பிட்டார். ஆறுகளில் இருந்து உபரி நீரை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்றுவதே இதன் நோக்கம், வெள்ளம் மற்றும் வறட்சி பிரச்சினைகளை தீர்க்கும் என்று அவர் கூறினார். உச்ச நீதிமன்றமும் இந்த நோக்கத்தை ஆதரித்தது என்றும், ஆனால் முந்தைய அரசுகள் ஒருபோதும் தண்ணீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக மாநிலங்களுக்கு இடையிலான நீர்த் தகராறுகளை ஊக்குவித்ததாகவும் அவர் மேலும் கூறினார். பெண்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் இந்தக் கொள்கையால் ராஜஸ்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை திரு மோடி சுட்டிக்காட்டினார். அப்போதைய அரசு நர்மதா நதி நீரைத் தடுக்க முயன்ற போதிலும், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது குஜராத் மற்றும் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளுக்கு நர்மதா நதியைக் கொண்டு வரத் தாம் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். அவரது தொடர்ச்சியான முயற்சிகள் ராஜஸ்தானுக்கு பயனளித்தன என்று குறிப்பிட்ட பிரதமர், திரு. பைரோன் சிங் ஷெகாவத், திரு ஜஸ்வந்த் சிங் போன்ற மூத்த தலைவர்கள் இந்த முயற்சிகளைப் பாராட்டினர். ஜலோர், பார்மர், சுரு, ஜுன்ஜுனு, ஜோத்பூர், நாகவுர், ஹனுமன்கர் போன்ற மாவட்டங்கள் தற்போது நர்மதா நீரைப் பெறுவது குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

கிழக்கு ராஜஸ்தான் கால்வாய்த் திட்டம் தாமதமாகி வருவதை சுட்டிக்காட்டிய திரு மோடி, எதிர்ப்புகள் மற்றும் தடைகளுக்கு எதிராக ஒத்துழைப்பு மற்றும் தீர்வுகளில் தமது அரசு நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார். தமது அரசாங்கம் இ.ஆர்.சி.பி.க்கு ஒப்புதல் அளித்து விரிவுபடுத்தியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அரசுகள் அமைந்தவுடன், பர்பதி – காளிசிந்த்-சம்பல் இணைப்புத் திட்டம் குறித்து உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இது சம்பல் நதி மற்றும் அதன் துணை நதிகளான பர்பதி, கலிசிந்த், குனோ, பனாஸ், ரூபரேல், கம்பீரி மற்றும் மெஜ் நதிகளை இணைக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார். ராஜஸ்தானில் இனி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்றும், வளர்ச்சிக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என்றும் ஒரு நாளை கற்பனை செய்வதாக பிரதமர் குறிப்பிட்டார். பர்பதி – காளிசிந்த் – சம்பல் திட்டத்தின் பயன்களை எடுத்துரைத்த திரு மோடி, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் அதே வேளையில், ராஜஸ்தானில் உள்ள 21 மாவட்டங்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் வழங்க இத்திட்டம் உதவும் என்றார்.

 

ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இரு மாநில மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் தாஜேவாலாவிலிருந்து ஷேகாவதிக்கு தண்ணீர் கொண்டு வரும் இசர்டா இணைப்புத் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இத்திட்டத்தால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்புக் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். "21-ம் நூற்றாண்டில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக கூறிய பிரதமர், சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள பெண்கள்  முன்னேற்றம் அடைந்து வருவதாக குறிப்பிட்டார்.  கடந்த பத்தாண்டுகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உட்பட நாடு முழுவதிலும்  10 கோடி பெண்கள் இந்த சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்று அவர் கூறினார். இந்த  மகளிர் சுய உதவிக் குழுக்களை வங்கிகளுடன் இணைப்பதன் வாயிலாகவும், நிதி உதவியை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியதன் மூலம் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்க முடியும் என்று அவர் எடுத்துரைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு பயிற்சி, சந்தை வாய்ப்புகள் போன்றவற்றின் மூலம் அவர்களின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். சுய உதவிக் குழுக்களில் இருந்து மூன்று கோடி பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக உருவாக்க மத்திய அரசு தற்போது செயல்பட்டு வருவதாகவும், ஏற்கனவே 1.25 கோடிக்கும் கூடுதலான பெண்கள் இந்த நிலையை எட்டியுள்ளதாகவும், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான எண்ணற்ற புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர், "நமோ ட்ரோன் தீதி" திட்டத்தை எடுத்துரைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ட்ரோன் விமானிகளாக பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.  ஆயிரக்கணக்கான மகளிர் குழுக்கள் ஏற்கனவே ட்ரோன் விமானங்களை இயக்குவதற்கான  பயிற்சியைப் பெற்றுள்ளதாகவும், பெண்கள் வேளாண் பணிகளை மேற்கொள்ளவும் அதன் வருவாய் ஈட்டுவதற்கும் உதவிடும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ராஜஸ்தான் மாநில அரசும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

பெண்களுக்காக அண்மையில் தொடங்கப்பட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க திட்டமான பீமா சகி திட்டம் பற்றிக் குறிப்பிட்ட திரு மோடி, இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், இளம் பெண்களுக்கு காப்பீட்டுப் பணிகளுக்கான பயிற்சி வழங்கப்படும் என்று கூறினார். இந்தத் திட்டம்  வருவாய் ஈட்டுவதற்கும் நாட்டுக்கு சேவை செய்வதற்கும் வாய்ப்பை வழங்குவதாக அவர் கூறினார். நாடு முழுவதும் வங்கிச் சேவைகளை விரிவுபடுத்தி, புதிய கணக்குகள்  தொடங்கப்பட்டு, கடன் வசதிகளுடன் மக்களை இணைக்கும் வங்கி சேவையின் குறிப்பிடத்தக்க சாதனைகளை பிரதமர் எடுத்துரைத்தார்.  இந்தியாவில் உள்ள அனைத்துக் குடும்பத்திற்கும் காப்பீட்டு வசதியை வழங்கும் வகையில், வங்கி சேவைகளுடன் இணைந்த பீமா சகி திட்டம் உதவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்குத் தேவையான  கிராமப்புற பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிரதமர் கூறினார். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வருவாய், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மின்சாரத் துறையில் பல்வேறு  ஒப்பந்தங்களை அம்மாநில அரசு செய்துள்ளதாக குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, விவசாயிகளுக்கு பகல் நேரங்களில் மின்சாரம் தடையின்றி வழங்குவதற்கான அம்மாநில அரசின் திட்டம், இரவு நேர நீர்ப்பாசன திட்டம் போன்றவற்றுக்கு உதவிடும் என்று அவர் தெரிவித்தார்.

"ராஜஸ்தான் மாநிலத்தில் சூரியசக்தி  உற்பத்திக்கு ஏற்ற  சூழல் உள்ளதாகவும் இந்தத் துறையில் முன்னணி மாநிலமாக ராஜஸ்தான் உருவாகும் என்றும் திரு நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்தார். மின்சார கட்டணமில்லாத மாநிலமாக உருவாக்குவதற்காகு சூரிய சக்தி உற்பத்தி வழி வகுக்கும் என்று அவர் கூறினார். வீடுகளின் கூரைகளில் சூரிய சக்தி உற்பத்திக்கான தகடுகளைப் பொருத்துவதற்கு ரூ.78,000 வரை மானியம் வழங்கும் பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூரிய மின்சாரத் திட்டம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், சூரியசக்தி மூலம்  உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வீடுகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், உபரி மின்சாரத்தை அரசே கொள்முதல் செய்து கொள்ளும் என்றும் அவர் கூறினார். 1.4 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இந்தத் இத்திட்டத்தில் பதிவு செய்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர்,  சுமார் 7 லட்சம் வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள்  அமைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். ராஜஸ்தானில் 20,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் இத்திட்டத்தின் கீழ், சூரிய மின் உற்பத்தித் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது அவர்களின் மின் கட்டணத்தை சேமிக்க வழிவகுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

வீடுகளின் மேற்கூரைகள் மட்டுமன்றி விவசாய நிலங்களிலும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு அரசு சார்பில்  உதவிகள்  வழங்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், பிரதமரின் விவசாயிகள் எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வரும் காலங்களில் நூற்றுக்கணக்கான புதிய சூரிய மின் உற்பத்தி ஆலைகளை நிறுவ ராஜஸ்தான் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். ஒவ்வொரு குடும்பமும், விவசாயிகளும் மின்சார உற்பத்தியாளராக மாறும்போது, அதிலிருந்து கிடைக்கும் வருவாய் அவர்களது பொருளாதாரத்தை மேம்படச் செய்யும் என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

 

சாலை, ரயில், விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை ராஜஸ்தான் மாநிலம் மேம்பட்ட போக்குவரத்து வசதிகளைக் கொண்ட மாநிலமாக மாற்றுவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். தில்லி, வதோதரா, மும்பை போன்ற முக்கிய தொழில் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்கும் என்று என்று அவர் குறிப்பிட்டார். இந்த மூன்று தொழில் நகரங்களையும் ராஜஸ்தான் மாநிலத்துடன் இணைக்கும் புதிய விரைவுச் சாலை நாட்டின் மிகச் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும் என்று கூறினார். மெஜ் ஆற்றின் குறுக்கே பெரிய பாலம் கட்டப்படுவதன் மூலம் சவாய் மாதோபூர், புந்தி, டோங்க், கோட்டா மாவட்டங்கள் பயனடையும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தில்லி, மும்பை, வதோதராவில் உள்ள முக்கிய சந்தைகளை அணுக இது வழி வகுக்கும் என்று கூறினார். ஜெய்ப்பூர், ரன்தம்போர் புலிகள் சரணாலயத்திற்கு சுற்றுலாப் பயணிகள் எளிதில் செல்ல இத்திட்டம் உதவிடும் என்று அவர் கூறினார். இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் நேரம் மிச்சப்படுவதுடன், பயணிகளின் வசதிகளை  உறுதி செய்வதே  முதன்மையான நோக்கம் என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

ஜாம்நகர் – அமிர்தசரஸ் இடையேயான பொருளாதார வழித்தடம், தில்லி – அமிர்தசரஸ் - கத்ரா விரைவுச் சாலையுடன் இணைக்கப்படும்போது, ராஜஸ்தான் மாநிலத்தில்  உள்ள வைஷ்ணோ தேவி புனிதத்தலத்துடன் இணைக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறினார். இது வட இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் கண்ட்லா மற்றும் முந்த்ரா துறைமுகங்களுக்கு நேரடி அணுகலை வழங்கும் என்றும், பெரிய கிடங்குகளை நிறுவுவதன் மூலம் ராஜஸ்தானின் போக்குவரத்துத் துறைக்கு பயனளிக்கும் என்றும், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்தார். ஜோத்பூர் வட்டச் சாலை, ஜெய்ப்பூர், பாலி, பார்மர், ஜெய்சால்மர், நாகவுர், சர்வதேச எல்லைகளுக்கான இணைப்பை மேம்படுத்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இது நகரில் தேவையற்ற போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன் சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள், போன்றவர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், ஒவ்வொரு சொட்டு நீரையும் திறம்பட பயன்படுத்துவது அரசு மற்றும் சமுதாயத்தின் பொறுப்பு என்று பிரதமர் குறிப்பிட்டார். நுண்ணீர் பாசனம், சொட்டு நீர் பாசனம், ஏரிகள் பராமரிப்பு போன்ற நடைமுறைகளில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மரம் நடுதலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு நரேந்திர  மோடி, தாய் மற்றும்  பூமி அன்னையை கௌரவிக்கும் வகையில் "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் " இயக்கத்தை பரிந்துரைத்தார். சூரிய சக்தியின் பயன்பாடு, பிரதமரின் இல்லம் தோறும் சூரிய மின் உற்பத்தி ஆகியவற்றின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார். ஒரு இயக்கத்தின் பின்னணியில் உள்ள சரியான நோக்கத்தையும், கொள்கையையும் காணும் போதுதான், மக்கள் அதனை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று அவர் கூறினார். தூய்மை இந்தியா, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்போம் இயக்கம் வெற்றி அடைந்தது போல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இதே போன்ற வெற்றி கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

ராஜஸ்தானில் மேற்கொள்ளப்படும் நவீன உள்கட்டமைப்புத் திட்டங்கள் தற்கால, எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இத்தகைய முயற்சிகள் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவிடும் என்று கூறினார். தனது உரையை நிறைவு செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, வரும் ஆண்டுகளில், மத்திய, மாநில அரசுகள் விரைவாக செயல்படும் என்று கூறியதுடன், ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து உதவிகளும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில ஆளுநர் திரு ஹரிபாவ் கிஷன்ராவ் பகாடே, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

மத்திய அரசின் 7 திட்டங்கள், மாநில அரசின் 2  திட்டங்கள் உட்பட ரூ.11,000 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான 9 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் மத்திய அரசின் 9  திட்டங்கள், மாநில அரசின் 6  திட்டங்கள் உட்பட ரூ.35,300 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான 15 திட்டங்களுக்கு அவர்  அடிக்கல் நாட்டினார்.

 

நவ்நேரா தடுப்பணை, நவீன மின்சார பரிமாற்றத் திட்டம்,  சொத்து மேலாண்மை அமைப்பு திட்டங்கள், பில்டி – சம்தாரி – லுனி – ஜோத்பூர் – மெர்தா சாலை – தேகானா – ரத்தன்கர் பிரிவில் மின்மயமாக்கல், தில்லி – வதோதரா பசுமை தள சீரமைப்பு (தேசிய நெடுஞ்சாலை   எண்- 148) (மெஜ் ஆற்றின் மீது மாநில நெடுஞ்சாலை – 37ஏ சந்திப்பு வரை உள்ள பெரிய பாலம்) தொகுப்பு 12 ஆகியவை தற்போது தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்கள் மக்களுக்கு எளிதான பயணத்தை வழங்குவதுடன், பசுமை எரிசக்தி குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மாநிலத்தின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய உதவிடும்.

ராம்கர் தடுப்பணை, மஹல்பூர் தடுப்பணை கட்டும் பணிக்கும், நவ்நேரா தடுப்பணையில் இருந்து பிசல்பூர் அணைக்கும், சம்பல் ஆற்றின் குறுக்கே கால்வாய் வழியாக இசர்தா அணை கட்டுவதற்கான  பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

 

அரசு அலுவலகக் கட்டிடங்களில் மேற்கூரை சூரிய மின்சக்தி ஆலைகளை நிறுவுதல், பூகலில் (பிகானேர்) 1000 மெகாவாட் சூரிய பூங்கா, 1000 மெகாவாட் சூரிய பூங்காக்களின் இரண்டு கட்டங்கள், சாய்பாவ் (தோல்பூர்) முதல் பரத்பூர்-தீக்-கும்ஹர்-நகர்-நகர்-கமான் & பஹாரி மற்றும் சம்பல்-தோல்பூர்-பரத்பூர் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். லூனி – சம்தாரி – பில்டி இரட்டை பாதை, அஜ்மீர் – சந்தேரியா இரட்டை ரயில் பாதை, ஜெய்ப்பூர் – சவாய் மாதோபூர் இரட்டை ரயில் பாதை திட்டம் மற்றும் இதர எரிசக்தி பரிமாற்றம் தொடர்பான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka

Media Coverage

Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 5, 2025
December 05, 2025

Unbreakable Bonds, Unstoppable Growth: PM Modi's Diplomacy Delivers Jobs, Rails, and Russian Billions