குரேஷியக் குடியரசின் அதிபர் மேன்மை தங்கிய சோரன் மிலானோவிச்சை ஜாக்ரெபில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஜனநாயகத்தின் பகிரப்பட்ட மாண்புகள், சட்டத்தின் ஆட்சி, சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையின் பகிரப்பட்ட இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கு இடையே நெருக்கமான, நட்பார்ந்த உறவுகளில் தங்களின் உறுதிப்பாட்டை அவர்கள் வலியுறுத்தினர். பாதுகாப்பு, புத்தொழில், விளையாட்டு, புதிய கண்டுபிடிப்பு போன்ற புதிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் பன்முகத்தன்மை குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு வலுவான ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்ததற்காக குரேஷிய அதிபர் மிலானோவிச்சுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இரு நாடுகளையும் பிணைத்துள்ள பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலாச்சார தொடர்புகள் பற்றியும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

 

பரஸ்பர நலன் பயக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். அண்மைக் காலங்களில் இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உத்திசார் கூட்டாண்மை வலுவடைந்திருப்பது பற்றி குறிப்பிட்ட அவர்கள், இது இந்தியா – குரேஷியா உறவுகளுக்கு பல வழிகளில் மதிப்புக் கூடுதலை அளிக்கும் என்று தெரிவித்தனர்.

இந்தியா – குரேஷியா உறவுகளின் முழுமையான ஆற்றலையும் பயன்படுத்த ஒருங்கிணைந்து பாடுபட இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PUSA's IARI enters QS university ranking in agriculture, forestry category

Media Coverage

PUSA's IARI enters QS university ranking in agriculture, forestry category
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 26, 2026
March 26, 2026

India’s Economy, Innovative Spirit and Global Standing Continue to Thrive with the Modi Government