ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். ஸ்ரீ ராமர் கோயிலின் குடமுழுக்கு விழாவுக்கு திரு மோடியை அவர்கள் அழைத்தனர்.
அப்போது பேசிய பிரதமர், "நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனது வாழ்நாளில், இந்த வரலாற்று நிகழ்வை நான் காண்பது எனது அதிர்ஷ்டம் என்றார்”.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஜெய் சியாராம்!
இன்று உணர்ச்சிகள் நிறைந்த நாள். இப்போதுதான், ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் அதிகாரிகள் என்னை சந்திக்க என் இல்லத்திற்கு வந்திருந்தனர். ராமர் கோவிலில் நடைபெறும் 'குடமுழுக்குக்கை' முன்னிட்டு அயோத்திக்கு வருமாறு அவர்கள் என்னை அழைத்துள்ளனர்.
நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். என் வாழ்நாளில், இந்த வரலாற்று நிகழ்வைக் காண்பது எனது பாக்கியம்."
जय सियाराम!
— Narendra Modi (@narendramodi) October 25, 2023
आज का दिन बहुत भावनाओं से भरा हुआ है। अभी श्रीराम जन्मभूमि तीर्थ क्षेत्र ट्रस्ट के पदाधिकारी मुझसे मेरे निवास स्थान पर मिलने आए थे। उन्होंने मुझे श्रीराम मंदिर में प्राण-प्रतिष्ठा के अवसर पर अयोध्या आने के लिए निमंत्रित किया है।
मैं खुद को बहुत धन्य महसूस कर रहा… pic.twitter.com/rc801AraIn


